பிரச்னைகள் அஞ்சி ஓடும்

carpent

ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலியிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களையெல்லாம்  எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக்கொண்டே போய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து  ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி அவரைக் கடுமையாகத் திட்டினார்.  மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார்.  சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது.  காயத்துக்கு துணியால் கட்டுப்போட்டுகொண்டு மீண்டும் வேலைகளைத் தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது,,

என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே  என்று முணுமுணுத்துக்கொண்டே  மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார்.  ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது.,,இருட்டிப்போய் விட்டது  இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய்  வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டு விட்டு வருகிறேன்  என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார்.  போகும் வழியில் பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு என்று ஆறுதல் சொல்லிக்கொண்டே  கூட்டிகிட்டு போனார்.  தச்சர் வீடு வந்ததும்  தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணீர் எடுத்துகிட்டு வா  என்று முதலாளி சொன்னார்.  வீட்டுக்குள் வாங்க முதலாளி  என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர்.  முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார்.  முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது.  குழந்தையைப் பார்த்த்தும் தூக்கி அதற்கு முத்தம் கொடுத்தார். தன் மனைவியைப் பார்த்ததும் புன்முறுவலுடன் முதலாளியை அறிமுகப்படுத்தினார்.  தண்ணீர் எடுத்து வரச் சொன்னார்.  காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்துப் பார்க்காமல் எப்படி இருக்க முடிகிறது என முதலாளி வியந்தார். 7650

தச்சர்  எந்தவித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.  தண்ணீர் குடித்துவிட்டு முதலாளி கிளம்பத் தயாரானார்.  வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம் இந்த மரத்தைத் தொட்டுவிட்டுப்போனவுடன்  காலையில் நடந்த எதைப் பற்றியும் கவலைப்படாமல் எப்படி உன்னால் இருக்கமுடியும் என்றார்.   அதுவா முதலாளி  இது என்னுடைய சுமைதாங்கி மரம் ஒவ்வொரு நாளும் நான் வேலை முடிந்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்துவிட்டுத்தான் செல்வேன்  வேலை செய்யும் இடத்தில்  ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும் அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துக்கொண்டு போக்க்கூடாது.  காலையில் வண்டி பழுதானதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்   நான் அவர்கள் மேல் கோப்ப்படுவது  எந்த விதத்தில் நியாயம்   காலையில் நான் போகும்போது  இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துகொண்டு போவேன். ஆனால் என்ன ஆச்சர்யம் என்றால் நான் மாலையில் கொண்டு வந்து வைத்துவிட்டு  போன பிரச்னைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்  தச்சர் சொல்வதைக் கேட்டமுதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார்.  நண்பர்களே நாளையில் இருந்து நீங்களும் இதைக் கடைப்பிடித்துப் பாருங்கள்  பிரச்சனைகள் அஞ்சி ஓடிவிடும்

4 thoughts on “பிரச்னைகள் அஞ்சி ஓடும்

 1. வணக்கம்
  அம்மா

  நிச்சயம் நானும் கடைப்பிடிக்கிறேன் அம்மா மிகஅருமையான கதை பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. நீண்ட நாட்களுக்குப் பிறகு என் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி ரூபன். பாராட்டுக்களுக்கும் மிகவும் நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s