ஆஹா டிப்ஸ்

download

வழக்கமான துவையலை விட முள்ளங்கி துவையல் உடலுக்கு மிகவும் நல்லது. இதற்கு தேவையானவை அரை கிலோ முள்ளங்கி மிளகாய் வற்றல் 10  கடுகு உளுத்தம்பருப்பு இஞ்சி ஒரு துண்டு கொஞ்சம் மிளகு முள்ளங்கி தவிர மற்றவற்றை கடாயில் எண்ணெய் ஊற்றி சிவக்க வறுத்துக்கொள்ளவும். முள்ளங்கியைத் தூல் சீவி துருவி கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கவும். வறுத்த பொருட்களுடன் கொஞ்சம் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து அதோடு முள்ளங்கி சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். சப்பாத்தி பூரி சாதத்தில் போட்டுச் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.down

தூதுவளை ஒரு கற்பக மூலிகையாகும் இந்த செடியில் முட்கள் நிறைய இருக்கும். மருந்தாகப் பயன்படுத்தும்போது முட்களை எடுத்துவிட வேண்டும். தூதுவளை இலையைப் பச்சடியில் சேர்க்கலாம். வேறு வேறு காய்கறிகளோடு சேர்த்துக் கூட்டாகவும் சமைக்கலாம். தூதுவளையைப் பயன்படுத்துவதால் காது மந்தம் வராது. காச நோயை குணமாக்கும். உடலில் உள்ள நமைச்சலைப் போக்கும். உஷ்ணத்தால் ஏற்படும் உடல் இளைப்பு மற்றும் நீர்க்குத்தலை நீக்கும். தூதுவளை கஷாயம் லேகியம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மருந்து.7494675

வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டு தக்காளி அரைத்துச் சேர்த்து சிறிது மிளகு பொடி உப்பு சீரகம் சேர்த்து ஒரு தம்ளர் சேர்த்துக் கொதிக்கவிடவும். வடிகட்டாமல் தினமும் இந்த சாற்றை ஒரு முறை குடித்து வர உடல் பருமன் குறையும்.eve

பெரியவர்களோ சிறியவர்களோ கீழே விழுந்து  விட்டால் உடலில் வீக்கம் வலி ரத்தக்கட்டு போன்றவை ஏற்படலாம். புளியைக் கரைத்து மஞ்சள் பொடி சேர்த்து சூடாக்கி பற்றுப் போட வீக்கம் குறைந்து வலி ரத்தம் கட்டுதல் நீங்கி விரைவில் சரியாகும்.vim

எண்ணெய் பிசுக்கு பாத்திரங்களை சுலபமான முறையில் சுத்தம் செய்வதற்கு விம் லிக்விட் கலந்த வென்னீரில் அரை மணி நேரம் பாத்திரங்களை ஊற வைக்கவும். பின்னர் சுத்தம் செய்தால் பிசுக்கு பளிச் சென்று போய்விடும்.download-1

தலையில் பொடுகு பேன் நீங்க சூப்பர் வைத்தியம் வாரம் ஒரு முறை ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு ஊறவைத்து வேப்பம்பூ வெங்காயம் சேர்த்து மையாக அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பொடுகு பறந்தோடிவிடும்.

 

Advertisements

2 thoughts on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s