ஆஹா ஆலயம்

1

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் காயத்ரி மண்டபத்தில் அழகே உருவெனக்கொண்டு சேவை சாதிக்கிறார் ஸ்ரீகள்வர் பெருமாள். தாயாரின் திரு நாமம் சௌந்தர்ய லக்ஷ்மி   108 திவ்ய தேசங்களில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது. சாபமொன்றினால் அரூபமான மஹாலக்ஷ்மி  விமோசம் பெற காயத்ரி மண்டபத்தில் தவம் செய்கிறார். அதற்கு இடையூறு வராமல் காக்க பெருமாளும் எழுந்தருளியதாக புராணம் கூறுகிறது. ஸ்ரீகள்வர் பெருமானை மார்கழி மாதத்தில் மனதாரத் தொழுதால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்.sri

புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் உள்ள சிங்கிரி கோயில் எனும் ஊரில் உக்கிர நரசிம்மர் மூலவராகவே உள்ளார். பொதுவாக யோக நரசிம்மரைத்தன் மூலவராக அமைப்பது வழக்கம். இங்கு வீற்றிருக்கும் இப்பெருமாளின் முகத்தில் அமைதி தவழ்கிறது. உக்கிர நரசிம்மரை மூலவராகக் கொண்ட கோவில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.v5

திருவெண்காடு திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமான் அபூர்வமான வடிவம் கொண்டவர் 14 புவனங்களை குறிக்கும் 14 சதங்கைகள் கொண்ட காப்பு பிரணவம் முதல் நமக வரையில் உள்ள 81 பத மந்திரங்களை உணர்த்தும் 81 சங்கிலி வளையங்கள் கோத்த அரை ஞாண் 28 ஆகமங்களை குறிக்கும் 28 எலும்புத்துண்டுகள் கோத்த ஆரம்  16 கலைகலைக் குறிக்கும் வகையில் 16 சடைகள் என்று அபூர்வ வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

OLYMPUS DIGITAL CAMERA

ஒடிசா மானிலம் ராஜ்பூர் நகர் வைதாரணி ஆலயத்தில் பிராமி கவுமாரி மகேஸ்வரி நாராயணி இந்திராணி வராஹி காளி எனப்படும் சப்த மாதர்கள் அவர்களின் கரங்களில் தவழும் அழகிய குழந்தைகளுடன் சுமார் ஆறடி உயரத்தில் உருவச்சிலைகல் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய சப்த மாதர்கள் சிலைகள் வேறெங்கும் இல்லை.ambegal-krishnar

பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் 60 கிமீ தொலைவில் உள்ள தொட்டமளூர் நவனீத கிருஷ்ணன் கோயில் புத்திர பாக்யம் அருளும் கோயில் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. தவழும் கிருஷ்ணனான நவனீத கிருஷ்ணனை அம்பகேர் கிருஷ்ணா என்று கன்னடத்தில் சொல்கிறார்கள்.  புத்திர தோஷம் நீங்கி புத்திரபாக்கியம் கிடைத்த்தும் மரம் அல்லது வெள்ளியிலான தொட்டில்களைக் காணிக்கையாக செலுத்துகிறார்கள்.download

சென்னை அரக்கோணம் தக்கோலம் அருகில் உள்ள அருள்மிக ஸ்ரீ சுயம்பு திருமாலீஸ்வர்ர் திருக்கோவில் மிகவும் முக்கியமானது. இங்கு ஈசனை மஹாவிஷ்ணு வழிபட்டிருக்கிறார். இங்கு மஹாலக்ஷ்மி மனமகிழ்ந்து உறைந்துள்ளார். பரசுராமர் ஜமதக்னி முனிவர் ரேணுகா பரமேஸ்வரி பூஜித்த தலம் இது. பித்ருதோஷ நிவர்த்தி பெற்ற தலம். இங்கு பிரார்த்தித்தால் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு நெல்லி அகத்தி துளசி மூன்றும் தலவிருட்சங்கள் இங்குள்ள ஈசனை வேண்டிக்கொண்டதால் ராஜராஜ சோழன் போரில் வெற்றி கண்டார் என்று சொல்லப்படுகிறது.

Advertisements

One thought on “ஆஹா ஆலயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s