ஆரோக்கியம் பேணுவோம்

11

ஒருவர் நஞ்சை [ தவறான உணவை ] உட்கொண்டார் என வைத்துக்கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்று விடும். அதற்குப் பிறகு அதை மூளை கவனித்துக்கொள்ளும்.உடம்புக்குக் கூடாத அந்த நஞ்சை வெளியேற்றுமாறு இரைப்பைக்கு பணிக்கும். இரைப்பை வாந்தி மூலம் வெளியே தள்ளும்போது அவர் உடனே டாக்டரை நாடி “ டொம்பெரிடன்’ ஒன்றை போட்டு நிறுத்தி விடுவார்.

இன்னும் உள்ளுக்குள்  நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். “ நான் என்ன செய்ய அரசே இவன் விட்டான் இல்லையே ‘ என்று இரைப்பை ஒதுங்கிவிடும். ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். உடனே மூளையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு குடல் வயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை  நாடிச் செல்வார்.  அவரும் ஒரு லோபிரமைட் ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.

உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.  மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலைப் பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி இருமல் மருந்து ஒன்றை சாப்பிடுவார். நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். சொறி சிரங்கு மூலம் தோல் வெளியேற்ற முயலும்போது தோல் மருந்து வகைகளை பாவித்து அதையும் மருத்துவர் நிறுத்திவிடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.udala

உடம்புக்குள் ஒரு குப்பைதொட்டியை உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப்பார்த்து அதையும் வெட்டி வீசிவிடவே மூளை யாரையும் நம்பி இனி பிரயோசம் இல்லை என்று நஞ்சைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது மூளை கான்சர் கட்டி  [ brain tumour ] ஆக மாறும் அபாயம் உண்டு.  நமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குள் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்,  வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுவிடுவோம் என்பதாலோ என்னவோ எந்த நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும் குளிர் வந்தால் போர்த்திக்கொள்ள சொல்லும் வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.12

இப்படி உடலுக்குத் தேவையானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை  போவோமா? தாகம் எடுத்தால் நாலைந்து சைலைன் பாட்டில்கள் ஏற்றிக்கொள்ளும் வழக்கமா நம்மிடம் உள்ளது/  இதே போல் சக்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ளதை வெளியேற்றவே.  இதை நோய் என அறிமுகப்படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என அறிமுகப்படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்றுதானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறிய வைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்.?13

மூக்கு ஒழுகுதல் சளி பிடித்தல் இருமல் காய்ச்சல் இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை  இதற்கு மருத்துவம் செய்து இராசயன வில்லைகலை விழுங்குவது அறியாமையின் உச்சம்.  இவைகள் நம் உடல் ஆரோக்கிய நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.  இவைகள் நம் உடலில் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்.  மருத்துவம் உடல் சுத்திகரிக்கும் செயலைத் தடுத்து கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து மேலும் சேர்த்து நோய்களை பெரிதாக்கி புற்று நோய் வரை கொண்டு செல்லும். உடல் மொழியைப் புரிந்து கொள்ளுங்கள்  சின்ன சின்ன விஷயங்களுக்கு மருத்துவம் தவிருங்கள்  ஆரோக்கியம் அனுபவியுங்கள்fpm20070200p41-uf1

 

வாட்ஸ் அப்பில் படித்த்தில் பிடித்த்து.  உங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி

Advertisements

2 thoughts on “ஆரோக்கியம் பேணுவோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s