ஆஹா தகவல்

download

வாட்டர் போட்மேன் என்று அழைக்கப்படும் பூச்சி கடலின் மேல் பகுதிக்கு வந்து சுவாசித்து விட்டு கடலடிவரை நீந்திப் போகும் தன்மை படைத்தது. இது தன் வயிற்றுப் பகுதியில் கடலின் மேல் பரப்பில் நீந்தும் கடலுக்குள் போய் உணவைத் தேடிக்கொள்ளும்.

OLYMPUS DIGITAL CAMERA

கிரேக்க நாட்டில் யூரல் மலைப்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நகரம் உள்ளது. இந்த நகரம் கல்நார் எடுக்கும் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இந்த நகரத்தின் பெயராலேயே கல்நாருக்கு ‘ ஆஸ்பெஸ்டாஸ் ‘ என்ற பெயர் வந்த்து. கிரேக்க மொழியில் ஆஸ்பெஸ்டாஸ் என்றால் அழிக்கமுடியாத்து என்று பொருள்.12

குதிரைகள் மிக வேகமாக ஓடக்கூடியவை  நின்று கொண்டே தூங்கும். குடிப்பதற்கு 45 லிட்டர் தண்ணீர் தேவை. அவற்றுக்கு ஆயுள் சராசரி 30 வருடம். குதிரைக் குட்டிகள் பிறந்த சில நிமிடங்களில் துள்ளிக் குதித்து எழுந்து நடக்கும். 99வது நூற்றாண்டைச் சேர்ந்த பெல்லி என்ற குதிரை 62 வயது வரை வாழ்ந்த்து. சுகர் பஃப் என்ற குதிரை 56 வயதில் இறந்த்து. இதுவே வயது மிக்க குதிரை என்று 2007 உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.download-1

வெப்ப நிலைக்கு தக்கபடியும் தான் இருக்கும் சூழ்நிலையைப் பொருத்தும் காக்கை பருந்துகளால் வரும் ஆபத்துக்களைத் தவிர்க்கவும் பச்சோந்தி தன் நிறத்தைப் பொதுவாக ப்ரௌனிலிருந்து பச்சையாக மாற்றிக்கொள்ளும். ஆண் பச்சோந்திகள் பெண் பச்சோந்திகளைக் கண்டால் பிங்க் கலராய் மாற்றிக்கொள்ளும். மூட் சரியில்லாத பச்சோந்திகள் தங்கள் நிறத்தைக் கறுப்பாக மாற்றிக்கொள்ளும். ஒவ்வொரு கண்ணும் தனித்தனியாகப் பார்க்கும். ஆனால் இரையைப் பிடிக்கும்போது மட்டும் இரையையே பார்க்கும்.

சுமார் என்ற சொல்லைத் தமிழ்ச் சொல்லாக்க் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது பாரசீக்ச் சொல். இதைப்போன்றே தகவல் காயம் இவை அரேபியச் சொற்கள். ஆசாமி அக்கப்போர் ஊதுபத்தி இவை உருது சொற்கள். அன்னாசி  அலமாரி ஜன்னல் போர்த்துகீசிய மொழியிலிருந்து வந்தவை. பட்டாணி சேமியா இரண்டு வார்த்தைகளும் மராட்டி மொழிக்குரியவை. கொலுசு உருண்டை போன்ற சொற்கள் தெலுங்கு மொழியிலிருந்து வந்தவை.setc_02

தமிழ் நாட்டில்  நெடுஞ்சாலைத்துறை ஏப்ரல் 1946ல் உருவானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு போக்குவரத்துத் துறைக்காக்க் குழு அமைத்தது. அதன் பரிந்துடைப்படி சென்னை ராஜதானி அரசு சென்னையில் அப்போது ஓடிக்கொண்டிருந்த 239 தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கியது. தமிழ் நாடு மானிலப் போக்குவரத்துக்கழகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய போக்குவரத்துக்கழகமாகும்.

 

Advertisements

One thought on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s