வித்தியாசமான சிவலிங்கங்கள்

11

தஞ்சை மாவட்டம் திரு நீலக்குடி தலத்திலுள்ள சிவலிங்கத்தின் மீது எவ்வளவு நல்லெண்ணெய் ஊற்றினாலும் உள்ளே சென்றுவிடும்.

கும்பகோணம் அருகிலுள்ள திருந்துதேவன் குடியிலுள்ள கற்கடேசுவர்ருக்கு ஒரே நிறமுள்ள பசுக்களின் பாலினால் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் மீதுள்ள துளையிலிருந்து பொன்னிற நண்டு வெளிவரும் என்பர்.

சென்னை அருகே திருவிற்கோலத்திலுள்ள லிங்கம் வெண்ணிறமாகத் தோன்றும் சமயத்தில் பெருமழை பெய்யும் என்றும் செந்நிறமாக்க் காட்சியளித்தால் போர் வரும் என்றும் கூறுவர்.lingam

ஸ்ரீ காளஹஸ்தியில் அர்ச்சகர் கைப்படா சிவலிங்கமாக தீண்டாத் திருமேனியாக அமைந்துள்ள மூல லிங்கத்தின் மீது சிலந்தி பாம்பு யானையின் உருவங்கள் உள்ளன். [ ஸ்ரீ –– சிலந்தி   காளம் —- பாம்பு   ஹஸ்தி —- யானை ]

கோயில் வெண்ணி என்று  வழங்கப்படும்  திருவெண்ணியிலுள்ள மூல லிங்கத்தின் சிவபாகமானது கம்புக்கட்டு போல் பட்டை பட்டையாக காட்சியளிக்கிறது.ardhanarishvara

கருவறையில் லிங்க வடிவின்றி அர்த்த நாரீஸ்வர உருவில் சிவபெருமான் காட்சியளிப்பது திருச்செங்கோடு மலை மீது தான்.kedarnath

இமய மலையில் 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது திருக்கேதாரம். அங்கு நவம்பர் மாதம் பனிமழை பெய்து கோவில் முழுவதும் மூடிவிடும். அதன் பின்பு மே மாதம் முதல் பனி உருகி திருக்கோவில் தரிசனத்துக்காக திறக்கப்படும்.  என்ன ஒரு அற்புதம் என்றால் நவம்பர் மாதம் கோயிலை மூடும்போது பண்டாக்கள் [ பூசாரி ] ஏற்றி வைத்த விளக்கு மே மாதம் கோயில் திறக்கும்போதும் எரிந்து கொண்டிருக்கும். தேவர்களும் ரிஷிகளும் ஆறு மாத காலமாக இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.g_t1_871

சுயம்புலிங்கம் பெரிய சிவலிங்கம் மரகதலிங்கம் ஸ்படிக லிங்கம் என பல தலங்களில் தரிசித்திருப்போம் ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை ஒரே ஒரு கோயிலில் தான் காண முடியும். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பாப நாச நாதர் கோயில் மூலவர் ருத்ராட்சத்தால் உருவாக்கப்பட்டுள்ளார். இதுவே உலகின் முதல் சிவலிங்கம் என தலபுராணம் கூறுகிறது. அகத்தியர் தென் திசைக்கு சிவனால் அனுப்பப்பட்டபோது இத்தலத்தில் தங்கினார். சிவபெருமானின் திருமணக்காட்சிய சித்திரை முதல் நாளன்று கண்டுகளித்தார். இதை நினைவுபடுத்தும் வகையில் சித்திரை முதல் நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s