பூங்காவில் நடைப்பயிற்சி   1

park1

கடந்த 14 வருடங்களாக நான் காலையில் நடைப்பயிற்சி விடாமல் செய்து வருகிறேன்.  நானும் என் பிள்ளையும் எங்கள் வீட்டிலிருந்து சுற்று வட்டாரத்திலேயே செய்து வந்தோம். ஆனால் இந்த வீதிகளை தண்ணீர் குழாய்கள் தொலைபேசி இணைப்புகள் என தோண்ட ஆரம்பித்த்தால் இப்போது இரண்டு வருடங்களாக எங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் புகைவண்டி நிலையத்தின் பிளாட்பாரத்திலேயே செய்து வந்தோம்.

இந்த வருடம் அவன் பிப்ரவரி முதலிலேயே நீச்சலுக்கென்று போகிறான். நான் தனியாக செல்ல வேண்டியதால் எங்கள் வீட்டிலிருந்து ஐந்து  நிமிட தூரத்திலிருக்கும் ஒரு பூங்காவில் நடைபயிற்சிக்கு செல்கிறேன். [அது ஏற்பட்டு இப்போது தான் ஆறு மாதமாகிறது.]  மிக நன்றாக அமைத்திருக்கிறார்கள். அதன் பக்கத்தில் இருந்த பள்ளியில் தான் நான் சுமார் 12 வருடங்கள் ஆசிரியையாக வேலை பார்த்தேன்   என் இரண்டு பெண்களும் அங்கு தான் படித்து முடித்தார்கள்.

park3

 

உள்ளே நுழைந்தால் கண்ணுக்கினிய பச்சைப் பசேலென்ற புல்வெளி  நிறைய செடி கொடிகள்.  காலுக்கு இதமாக நடப்பதற்கென்றே  மார்பிள் கற்கள் பதித்த நடைபாதை.  நடக்கும்போதே செவிக்கினிய பறவைகளின் கீச் கீச்.  இந்த மாதிரி பறவைகளையெல்லாம் பார்த்து நீண்ட நாட்களாகின்றன. சாதாரண இரட்டைவால் குருவி,   ஓயாது கூவும் குயில், சில பச்சைக் கிளிகளும் தென்படுகின்றன. இன்று காலை அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் ஒரு நத்தை ஊர்ந்து கொண்டிருந்த்து.  மனதிற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.  தனியாக செல்வதால் யோசிக்கவும் தெரிந்த ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே நடக்கவும் நிறைய நேரம் கிடைக்கிறது.  சுற்றிலும் எங்கும் பசுமை..  நிறைய வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்.. காலைப் பொழுதுக்கான சிலு சிலுவென்ற தென்றல். சிறிது நேரத்தில் உடலை வருடும் சூரியனின் இளங்கதிர்கள்  வைட்டமின் டி யும் கிடைத்து விடுகிறது. அம்மாவின் மடிச்சுகமும், இயற்கை அன்னையின் அரவணைப்பும் அலாதியானதுதான். இயற்கையோடு ஒன்றிவிட்டால் எதுவுமே தேவையில்லை என தோன்றுகிறது.

இத்தனை இயற்கையையும் ரசித்தாலும் எனது ஒர் இழப்பும் இதில் உள்ளது.  என் பிள்ளையின் நகைச்சுவையும் அறிவு பூர்வமான வாக்குவாதங்களும்.  ஆனால் ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை அடைய முடியும் என்பது தானே இயற்கையின் விதி.

Advertisements

One thought on “பூங்காவில் நடைப்பயிற்சி   1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s