கடலலைகளின் ரசிகை

pondicherry-gandhi-beach-statue

பாரதியார் வாழ்ந்த பாண்டியில் பிறந்தவள் நான்.  கடற்கரை என்பது எனக்கு புதிதல்ல. கடல் அலைகளைப் பார்த்து ரசித்து வளர்ந்தவள் நான். அந்த காலத்தில் எங்களின் ஒரே பொழுதுபோக்கு கடற்கரைதான்.  சனி ஞாயிறு மாலைகளில் என் தந்தை என்னையும் என் தம்பியையும் சைக்கிளில் வைத்து அழைத்துக்கொண்டு போவார்.  இயற்கையை ரசிக்கச் சொல்லிக்கொடுத்தவர் என் தந்தை.  ஓடி வரும் அலைகளில் எத்தனை நேரம் நின்றாலும் அலுப்பு வராது. அப்போதெல்லாம் ஹவாய் என்ற மூன்று ரூபாய் செருப்புத்தான். செருப்போடுதான் நான் அலைகளில் நிற்பேன்.  பேரலை வரும்போது எனது செருப்புக்களில் ஒன்று கழண்டு ஓடிவிடும்.  முன்பே என் அப்பா சொல்லித்தான் அழைத்து வருவார். இந்த முறை செருப்பு போனால் வாங்கித்தரமாட்டேன் என்று.  நான் கெட்டியாகப் பிடித்துக்கொள்வேன் தொலைக்க மாட்டேன் என வாக்குறுதி கொடுத்துவிட்டுத்தான் அலைகளின் நிற்பேன்.  ஆனால் பாதி நேரம் தொலைத்துவிட்டு ஓர் அசட்டு முகத்துடன் நிற்பேன்.  திரும்பி வரும்போது புது செருப்புடன் வீடு வருவேன்.

Father and children playing on the beach at the sunset time.
Father and children playing on the beach at the sunset time.

என் தந்தையும் எங்களோடு குழந்தையாக மாறி விளையாடுவார்.  மணற் நண்டுகளைப் பிடித்து விளையாடுவோம்.  நண்டுகளை போட்டு என் தம்பியை பயமுறுத்துவதில் எனக்கு அலாதி விருப்பம். சூரியன் கடலில் மறைவதையும் சந்திரன் எழுவதையும் காட்டி என் தந்தை விளக்குவது இன்றும் என் நினைவில் ஆடுகிறது.  மணலைக் குவித்து வீடு கட்டச் சொல்லிக்கொடுப்பார். ஈர மணலில் கால் தடம் பதிக்க நடக்கச் சொல்லிக்கொடுத்தவர்.  என் தந்தை நடந்து சென்ற அதே தடத்தில் நானும் என் தடத்தில் என் தம்பியும் நடந்து வருவான்.  நான் ஒன்பதாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது என் தந்தையை இழந்தேன். அந்த நேரத்தில் அந்தக் கடற்கரை மீதும் எனக்கு மோகம் போனது.

slippers

ஆனால் திருமணமாகி ஹைதிராபாத் வந்த பிறகு கடலையும் கடற்கரையும் விட்டு வந்தது  மிகவும் வேதனையாக இருந்த்து.  ஊருக்கு போகும் போதெல்லாம் கடற்கரைக்கு சென்று காலாற  நடப்பதோடு என் தந்தையின் நினைவுகளையும் மனதார அசைபோடுவேன் என்பது தான் உண்மை.

Advertisements

3 thoughts on “கடலலைகளின் ரசிகை

  1. இயற்கை
    எமது உள்ளத்தில்
    இடம்பிடித்துவிட்டால்
    எமது உள்ளம் – அந்த
    இயற்கையை நாடிச் செல்லத் தூண்டுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s