ஆஹா ஆலயம்

106261651

பொதுவாக முருகப் பெருமான் கையில் வேலும் சேவல் கொடியையும் பார்த்திருப்போம். ஆனால் தஞ்சை மாவட்டம் தேவராயன்பேட்டை என்ற ஊரிலுள்ள சிவன் கோயிலிலுள்ள ஆறுமுகன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். இவரை வழிபட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.thiruvakka

திருவக்கரை சந்திரமௌலீஸ்வர்ர் கோயிலில் சுவாமி நந்தி துவஜஸ்தம்பம் இராஜகோபுரம் முதலியன ஒரே  நேர்க்கோட்டில் இல்லாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிர நிலையில் உள்ளது. ஜாதகத்தில் கிரகங்கங்களின் வக்கிரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வக்கிரகாளி வக்கிர சனி பகவான் வக்கிர லிங்கம் ஆகியவற்றை தரிசித்துக்கோயிலை வலம் வந்தால் வக்கிர கிரங்களின் பாதிப்பு நீங்கி நலமாக வாழலாம்.koodalmanikyam

கேரள மானிலம் இரிஞ்சாலக்குடா என்ற ஊரில் கூடல் மாணிக்கம் என்னும் திருப்பெயரில் பெரிய கோவில் உள்ளது. பரதனுக்கென்றே இந்தியாவில் உள்ள ஒரே ஒரு கோவில் இதுவேயாகும். கோயிலில் சுற்றுச்சுவர் படிகளுடன் கூடிய பெரிய திருக்குளம் உள்ளது. இக்குளத்தில் தவளைகள் வசிப்பதும் இல்லை வருவதும் இல்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகும். கோயிலில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் சுபிட்சமும் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் உண்டாகும் என்பது ஐதீகம்.maa_tarini_temple_6

ஒரிசா மானிலத்திலுள்ள மாதாரணி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் அம்மனுக்கு ஆயிரக்கணக்கில் தேங்காய்களை உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.  நேரில் வர இயலாதவர்கள் தபாலிலும் தங்கள் காணிக்கையை செலுத்துகின்றனர். இந்தியாவிலேயே அம்மனுக்கு அதிகமாக தேங்காய் உடைப்பது இங்குதான் என்கிறார்கள்.t_500_817

கோவைக்கு சுமார் 35 கிமீ தூரத்தில் அன்னூர் என்ற ஊருக்கு அருகே பசூர் என்ற ஊரைத் தாண்டினால் மொன்டிப்பாளையம் ஸ்ரீனிவாசப்பெருமாள் கோவிலை அடையலாம். இந்தக் கோயில் பெருமாள் சுயம்புவாகத் தோன்றியவர். இந்தக் கோயில் பிராகாரச் சுற்றுச் சுவரில் பெருமாளின் ஜாதகம் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தை நன்கு பிரார்த்தித்துக்கொண்டால் நமது ஜாதகத்தில் உள்ள கெடுபலன்கள் நீங்கி நற்பலன்கள் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.h1

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள பொன்மலை நாதர் வரலாறு விசேஷமானது. இவ்வூரில் வாழ்ந்த வேடுவன் ஒருவன் கடப்பாரையைக் கொண்டு கிழங்குகளைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது கடப்பாரை ஒரு கல்லின்மீது மோத குபீரென்று குருதி பீறிட்டுப் பாய்ந்த்தாம். அதைப் பார்த்து அதிசயித்த அவ்வேட்டுவன் சிவலிங்கமூர்த்திக்குப் பச்சிலை வைத்தியம் செய்ததோடு வென்னீரைக் கொண்டு ஒத்தடமும் கொடுத்தான். பின்னர் மன்னர் ஒருவர் சிவனுக்கு மலைமீது கோயில் கட்டினார். இன்றும் வேடுவன் ஒத்தடம் கொடுத்தபடியே வென்னீரில் தான் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisements

2 thoughts on “ஆஹா ஆலயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s