பளீர் டிப்ஸ்

download-1

மைசூர் பாகு செய்யும்போது கட்டி தட்டுவதைத் தவிர்க்க தேவையான அளவு மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு காய்ச்சிய நெய் ஒரு கரண்டி ஊற்றிக் கிளறவும்; மேலும் சர்க்கரை பாகில் ஏலக்காய் போட்டு கிளறினால் கட்டி தட்டவே தட்டாது.download-2

பலகாரம் செய்ய எண்ணெய் காய்ச்சும்போது இஞ்சி வாழைப்பட்டையை அம்மியில் நசுக்கி போட்டுப் பொரித்து எடுத்தபின் உபயோகிக்கலாம். பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. எண்ணெய் புகையினால் வாந்தி தலைசுற்றல் போன்றவையும் வராது.200

உடல் பருமன் குறைய முற்றின பப்பாளிக்காயை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி பருப்பு சேர்த்து கூட்டாகவோ பொரியலாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம் வாரம் இருமுறையாவது இப்படி சாப்பிட்டுவர உடல் பருமன் குறையும்.1460785995-5715

நாள்தோறும் ஒரு ஏலக்காயின் விதையை எடுத்து பொடியாக்கி அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டுவர கண் பார்வை தெளிவடையும் அத்துடன் நரம்பு மண்டலமும் பலப்படும்.6

பாசிப்பயறு வகைகளுடன் குப்பைக்கீரையை சமைத்து கறவை மாடுகளுக்குக் கொடுத்துவந்தால் பால் கூடுதலாக கிடைக்கும்.ht1597

இளந்தளிரான மாவிலைகளை எடுத்துக் கஷாயம் போட்டு தேன் கலந்து பருகினால் தொண்டைக்கட்டு நீங்கும். சுண்ணாம்பில் தேனைக் குழைத்து தொண்டைக்குழியில் தடவிக்கொண்டாலும் தொண்டைக்கட்டு சரியாகும்.89

வெள்ளீப் பாத்திரங்களை அடிக்கடி உபயோகிக்காமல் இருந்தால் அவை கறுத்துவிடும். இதைத் தவிர்க்க அந்தப் பாத்திரங்களில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் கறுக்காது.download

பூக்குவளையில் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டிவிட்டால் அதில் வைக்கப்படும் பூக்கள் சீக்கிரம் வாடாது.malligai

பூக்கள் வாடாமலிருக்க பூக்களை ஒரு தட்டில் வைத்து தண்ணீரில் அலம்பிய ஒருபாத்திரத்தை அதன் மீது கவித்து வைத்தால் காலையில் அந்தப் பூக்கள் புதிதாக பறித்தது போல இருக்கும்461174498_df02b8ea5a

வடைக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் சிறிது அதிகமாகிவிட்டால் ஒரு ஸ்பூன் நெய்யை அதில் சேர்த்தால் போதும்  மாவு இறுகிவிடும்.

Advertisements

2 thoughts on “பளீர் டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s