பளீர் டிப்ஸ்

pineapple-kuzhambu

மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கமகமவேன வாசனையோடு ருசியாகவும் இருக்கும். இதேபோல் சிறிது வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து சேர்த்தாலும் மோர்க்குழம்பு ருசியாக இருக்கும்.karuvelam1

50 கிராம் கருவேலம்பட்டையை எடுத்துச் சுத்தம் செய்து காயவைத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு தினசரி பல் துலக்கி வர பல் சம்பந்தமான வியாதிகள் குறையும்.kungumam1

சுத்தமான மஞ்சள் கிழங்குகளை வாங்கி சிறு சிறு துண்டுகளாக உடைத்துப்போட்டு ஒரு தட்டில் வைக்கவும். அவை மூழ்கும் அளவுக்கு எலுமிச்சம்பழத்தின் சாற்றைப் பிழிந்து அந்தத் தட்டை வெயிலில் வைக்கவும். வெயிலில் காயக் காய சிவப்பாக மாறும்.  இதைத் தூள் செய்து ஒரு மெல்லிய துணியில் போட்டு சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். இதுவே உண்மையான நல்ல குங்குமம்.%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf

கொத்தமல்லி இலையைச் சாறு எடுத்து அதில் கஸ்தூரி மஞ்சளைக் கலந்து பூசிக் குளித்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.13

மருதாணி விழுதில் சிறிது ஜண்டுபாம் சேர்த்துக்குழைத்து கைக்கு இட்டால் ரத்தம் போல சிவப்பதுடன் ஜலதோஷம் பிடிக்கும் என்ற பயமும் இருக்காது.ravakesari-1

கேசரி செய்யும்போது கடைசியில் கொஞ்சம் வறுத்த கடலைமாவு போட்டுக்கிண்டி செய்தால் சேர்ந்தாற்போல் இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.sesame-oil

அரிசி பருப்பு போன்றவை கொதிக்கும்போது பாத்திரத்திலிருந்து அவை பொங்கி வழியாமல் தடுக்க ஒரு ஸ்பூன்  நல்லெண்ணெயை ஊற்றினால் உடனடியாகப் பொங்குவது நின்றுவிடும்.silver

பழைய புளித்த தயிரில் வெள்ளிப் பாத்திரங்களை  ஊறவைத்து கழுவினால் பளிச் சென்றாகிவிடும்.

Advertisements

2 thoughts on “பளீர் டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s