ஆஹா டிப்ஸ்

dsc03037%e0%ae%9c%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf

பீங்கான் ஜாடிகளை சுலபமாக சுத்தம் செய்யும் வழி இதோ.  ஜாடியின் அடியில் கொஞ்சம் அரிசியும் 6 டீஸ்பூன் வினிகரும் சேர்க்கவும். ஜாடியின் வாய் பகுதியை  கையாலோ அல்லது தட்டாலோ மூடி சுழற்றவும். பிறகு அதை கொட்டிவிட்டு சுத்தமான நீரால் கழுவினால் ஜாடி பளீர்.large_1346695845

உருண்டை வெல்லம் உடைப்பதற்கு சிரமமாக இருக்கும்பட்சத்தில் அதை மைக்ரோவேவ் அவனில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கட் செய்தால் சுலபமாக உடைக்கலாம். சில உருண்டை வெல்லம் கடினமானதாக இருக்கும்பட்சத்தில் கூடுதலாக ஒரு நிமிடங்கள் வைக்கலாம். சில சமயம் வெல்லம் பாகாய் மாறிவிடும். அதைக் கெட்டிப்படுத்த ஃப்ரிட்ஜில் வைத்தால் கடினமாகி விடும்.3

ஆனியன் தோசை ஆனியன் ரவா தோசை செய்வதற்கு  வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் கலந்துவிட்டு வார்த்தால் தோசையைத் தேய்க்க வராது. அதற்குப் பதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை முதலில் தோசைக்கல்லில் பரப்பிவிட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு முறுகலானவுடன் மாலை பரவலாக வார்த்தால் பிரமாதமாக இருக்கும்.thumbai-poo

கார்த்திகை மாதத்தில் தான் தும்பைச் செடிகள் பரவலாக வளரும். விஷக்கடிகளை நீக்கும் இயல்பும் தும்பைக்கு உள்ளது. தும்பை இலைகளை வதக்கி துவையல் அரைத்து சாப்பிடும் வழக்கமும் தும்பை இலைகளை ரசம் வைக்கும் வழக்கமும் கார்த்திகை மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தும்பை மழைக்காலத்தில் வௌம் சளியைக் கட்டுப்படுத்தும். தும்பை இலைச்சாறு கோழையை அகற்றும். தலைவலி வாத நோய் போன்றவற்றை குணப்படுத்தும்.download-1

டயாபடீஸால் அவதிப்படுவார்கள் இரவு படுக்கப்போகுமுன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓமம் இரண்டையும் கால் டம்ளர் நீரில் ஊற வைத்து காலையில் இதை அப்படியே சூடு பண்ணி ஆறவைத்து சாப்பிடவும். அரை மணி நேரம் வேறு எதுவும் உண்ணக்கூடாது. இதில் சர்க்கரை குறைந்தது 30 பாயின்ட் வரை குறைகிறது.download

ஒரு பிரிஞ்சி இலையை எடுத்து எரித்தால் அதிலிருந்து வரும் புகை ஐந்து  நிமிடத்தில் மன அமைதியும் மன அழுத்தத்திலிருந்து விடுதலையும் தருகிறது. மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளிக்கும் காரணிகள் பிரிஞ்சி இலையில் இருக்கின்றன என பிரபல ரஷ்ய விஞ்ஞானி கென்னடி மால்கள் கண்டுபிடித்துள்ளார். ஒரு காய்ந்த பிரிஞ்சி இலையை எடுத்து ஒரு அறையில் எரிய வைத்துவிட்டு 10 நிமிடம் வெளியே சென்று மீண்டும் அந்த அறையில் நுழையும்போது அங்கு ஓர் அருமையான சூழலை உணரலாம். எரிந்த இலையின் புகையில் நேர்மறையான ஆற்றல் ஓட்டம் உருவாக்கப்படுவதால் மன அழுத்தம் குறைந்து மன அமைதியைத் தருவதாக கூறப்படுகிறது.

Advertisements

One thought on “ஆஹா டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s