பளீர் டிப்ஸ்

lk

கேக்கில் ஐஸிங் செய்யும்போது கவனம் தேவை. ஸ்பூனால் மொத்தமாக ஐஸிங்கை எடுத்துப் பரவலாக விடலாம். ஐஸிங் அதிக சூடாகவோ குளிர்ந்தோ இருக்கக்கூடாது. வெது வெதுப்பாக இருக்கவேண்டும். ஐஸிங் செய்யும் முன் கேக்கின் மேல் பகுதிகளில் உள்ள துகள்களை எடுத்துவிடவேண்டும். முதலில் கேக்கின் மீது சர்க்கரைப் பாகைத் தடவியபின் தான் ஐஸிங் செய்யவேண்டும்.rt

நகச்சுற்றுக்கு கைகண்ட மருந்து பூண்டு.  சுண்ணாம்பு பூண்டு இரண்டையும் அரைத்து நகச்சுற்றுக்குப் போட்டுவர விரைவில் குணம் காணலாம்.download-2

வேப்பம்பூவைத் தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தடவி வர பேன் பொடுகு போய்விடும் முடி கொட்டாது.275

மாம்பூவைத் தணலில் போட்டு புகைப்போட்டால் கொசுக்கள் வராது.67

இட்லி மாவில் சிறிது தேங்காய் எண்ணெயில் வதக்கிய தேங்காய்த் துருவலைக் கலந்து  வேகவைத்தால் மணமான தேங்காய் இட்லி தயார்.sl4688

காரட் பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கை வேக வைத்து அதனுடன் சில்லி சாஸ் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும். உருண்டைகளை பிரட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவைமிக வெஜிடபிள் உருண்டை தயார்.download-1

சமையல் எண்ணெயை சூடாக்கும்போது வெற்றிலை அல்லது கொய்யா இலையைப் போட்டால் கசடு நீங்கும்.29

பிரட்டுக்கு நடுவில் பன்னீர் துண்டுகளை வைத்து தோசைக்கல்லில்  நெய்விட்டு பிரட்டி எடுத்தால் சுவையாக இருக்கும்.120

பழைய சாதத்துடன் மைதா ரவை நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கலக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகக் கிள்ளிப் போட்டு சிவந்ததும் எடுத்தால் சுவையான ரைஸ் பக்கோடா ரெடி.ric

சாதம் வடித்த கஞ்சியை வீணாக்காமல் உப்பு மோர் அல்லது சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு குருத்துக்களுக்கு நல்ல வலு கிடைக்கும். மூட்டு உராய்வைக் குறைப்பதில் ஜெலட்டிங்களுக்கு நிகரானது. கண்களுக்கு ஒளியூட்டி தேக உஷ்ணத்தைக் குறைக்கும்.

Advertisements

One thought on “பளீர் டிப்ஸ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s