கிரக தோஷம் நீக்கும் நந்தி

 

நவக்கிரங்களுக்கு நடுவில் நந்தியை தரிசிப்பது அரிய காட்சியல்லவா? இதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம்  ஆகும்

தல வரலாறுt_500_957

பசுபதி கோவிலிலுள்ள மரத்தின் கீழ் இருந்த ஒரு சுயம்பு சிவலிங்கம் மீது இலை தழைகள் விழுந்தன. பறவைகள் எச்சமிட்டன. இதைப் பார்த்த சிலந்தி வலை பின்னி லிங்கத்தின் மீது தூசு படாமல் பாதுகாத்தது. சிலந்தியின் நோக்கம் அறியாத யானை ஒன்று சிலந்தி வலை பின்னி லிங்கம் இருக்கும் இடத்தை பாழாக்குகிறதே என எண்ணி தன் தும்பிக்கையில் கொண்டு வந்த காவிரி நீரை வலைமீது ஊற்றி அதை அறுத்தது. கோபமடைந்த சிலந்தி யானையின் தும்பிக்கையில் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை துதிக்கையை தரையில் அடிக்கவே சிலந்தி இறந்தது. யானையும் வலி தாங்காமல் இறந்து விட்டது. சிவபதமடைந்த அந்த ஜீவன்களில் சிலந்தி கோச்செங்கட் சோழ மன்னனாக மறு பிறவி எடுத்தது. இந்த மன்னன் யானை ஏற முடியாத கோவில்கள் சிலவற்றை அமைத்தான். இவை மாடக்கோவில்கள் எனப்பட்டன. இவ்வகை கோயிலே பசுபதி கோவிலாகும். பசுக்களாகிய மக்களை காக்கும் பதியான சிவன் என்ற அடிப்படையில் சுவாமிக்கு பசுபதீஸ்வரர் என்று பெயரிடப்பட்டது. அம்பாளுக்கு சவுந்தர நாயகி என்றும் அல்லியங்கோதை என்றும் பெயருண்டு.

சிறப்பம்சம்pasupatikoil-4

இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி கருங்கல் குடை நிழலில் எருமை தலைமீது நின்று பல ஆயுதங்களைத் தாங்கியிருக்கிறாள். இரு வீரர்கள் கத்தியால் தங்கள் தலையை அரிந்து அம்பாளுக்கு காணிக்கையாக்குவது போன்ற சிற்பம் குறிப்பிடத்தக்கது. ஒரு கையில் வில் ஏந்தியிருக்கிறாள். இத்தகைய சிற்பத்தை காண்பது அரிது. இங்கு நவக்கிரக சன்னதியில் கிரகங்களுக்கு நடுவில் நந்தி இருப்பது விசேஷமான அம்சம். எந்த கிரகமும் சிவனின் காவலரான நந்தியை மீறி பக்தர்களுக்கு கெடுதல் செய்யாது என்பது நம்பிக்கை. நம் கோரிக்கையை நந்தியிடம் வைத்து விட்டால் கிரகக் கோளாறை நீக்கி அருள் செய்வார்.

கோவிலை மேடாக கட்டிய காரணம்rayalpalce2

காவிரியிலும் அதன் உப நதிகளிலும் அணைகள் உள்ள இக்காலத்திலேயே தஞ்சை டெல்டா சில சமயங்களில் வெள்ளம்  அச்சுறுத்தி விடுகிறது. அந்தக் காலத்தில் காவிரி வெள்ளம் சீறிப்பாய்ந்து இப்பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது. பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இந்த தகவல்களை இவ்வூர் அருகிலுள்ள திருசக்கரப்பள்ளியில் உள்ள சுந்தரசோழன் கல்வெட்டுக்களில் பதிவு செய்துள்ளார். வெள்ள காலத்தில் மக்கள் தங்கவும் இது போன்ற மேடான மாடக்கோயில்கள் கட்டப்பட்டதாகவும் சிலர் சொல்கின்றனர்.

இருப்பிடம்

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் 14 கிமீ தூரத்தில் பசுபதி கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கிமீ தூரத்தில் கோவில்

Advertisements

One thought on “கிரக தோஷம் நீக்கும் நந்தி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s