ஆஹா ஆலயம்

 

koniகோவையில் உள்ள கோணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. அம்மன்  எட்டுத் திருக்கரங்களுடன் வலது கரத்தில் சூலம் உடுக்கை வாள் சக்கரம் இடதுகரத்தில் கபாலம் தீ சக்ரம் மணி போன்றவற்றை ஏந்தியுள்ளார். இந்த அம்மனின் வலது செவியில் குண்டலமும் இடது செவியில் தோடுடன் அர்த்த நாரி திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.kann

கற்பூர தீபத்தின் ஒளியில் கண்களைத் திறந்து அருள்பாலிக்கும் கண் திறக்கும் பெருமாள் ஆலயம் சென்னையில் உள்ளது. நெற்குன்றம் செல்லும் வழியில் வெங்காய மண்டி பஸ் நிறுத்தத்துக்கு சிறிது தொலைவில் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் உள்ள அனைத்துச் சிலைகளும் அழகோ அழகு. அவற்றின் கண்களில் அபரீத ஒளி  வேலை கிடைக்க திருமணத்தடை நீங்க பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.sorna

தஞ்சை மாவட்டம் செம்பியவரம்பல் என்ற ஊரில் ஸ்ரீ சொர்ணா கர்ஷண பைரவர் ஆலயம் உள்ளது. சிவபெருமானின் அறுபத்து நான்கு பைரவர் வடிவங்களில் ஒன்று இது. இந்தியாவில் எங்குமேயில்லாத ஸ்ரீ சொர்ணா கர்ஷண பைரவர் திருக்கோவில் இது என்று கூறுகிறார்கள். இவர் செல்வத்தின் அதிபதியான குபேரனுக்கும் ஸ்ரீ லெட்சுமிக்கும் செல்வத்தினை வாரி வழங்கும்  வள்ளலாய் விளங்குபவர். இவரை அஷ்டமியில் எட்டுமுறை அரளிப்பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்துப் பணக் கஷ்டங்களும் பறந்தோடும் என்பது நம்பிக்கை.347

நாமக்கல் மலையில் மஹாவிஷ்ணு வரதராகவும் ரங்க நாதராகவும் நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் அருள்பாலிக்கிறார். இந்த மூன்று அவதாரங்களில் நரசிம்மரே பிரதானம். நரசிம்மர் கம்பீரமாக ஸ்ரீதேவி பூதேவி சமேதராக சிம்மாசனத்தின் மீது அருள்பாலிக்கிறார். நரசிம்மருக்கு நேர் எதிரேயுள்ள சுவர் சாளரத்தின் வழியாக எதிரிலுள்ள அனுமாரைக் காணலாம். அனுமனின் கண்கள் நரசிம்மரின் திருப்பாதங்களைப் பார்ப்பதுபோல் அமைந்துள்ளது அபூர்வ அமைப்பாகும்.download

இஞ்சிமேடு ஸ்ரீ பெருந்தேவி நாலிக ஸமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோவில் மிகவும் பழமையானது. இந்தக் கோயிலின் விசேஷம் தாயார் சிங்கமுகத்துடன் காட்சியளிக்கிறார். தாயாருக்கு வேண்டிக்கொண்டு தினமும் நெய் தீபம் ஏற்றி ஒரு கொம்பு மஞ்சள் ஒரு ரூபாய் நாணயம் எடுத்து வைத்து 48 நாட்கள் கழித்து மஞ்சளை மாலையாகத் தொடுத்து காணிக்கையாகச் சாற்றினால் உங்கள் குறைகள் உடனே நீங்கும்.piran-malai

மதுரையிலிருந்து பொன்னமராவதி போகும் வழியில் பிரான்மலையில் மங்கைபாகர் கோயில் உள்ளது இம்மலை மூன்று அடுக்குகளைக் கொண்டது.   கீழ் அடுக்கில் அம்பிகை குயில்முத்து நாயகியுடன் கொடுங்குடி நாதராகவும் மத்தியில் விசாலட்சியுடன் விஸ்வநாதராகவும் மேல் அடுக்கில் தேனாம்பிகையுடன் மங்கை பாக நாதராகவும் ஈசன் காட்சியளிக்கிறார். மங்கைபாகர் சிலை நவ மூலிகைச்சாறு கொண்டு செய்யப்பட்டதாகும்  எனவே அவருக்கு அபிஷேகம் செய்வதில்லை.

Leave a comment