ஆஹா தகவல்

2932514

நெல்லை மாவட்ட இடையன் குடியில் கால்டுவெல் கட்டிய சர்ச்சின் மேல் கோபுரத்தில் 4 மணிகள் இருக்கின்றன. மணிகளை கால்டுவெல்லின் சகோதரர் அன்பளிப்பாக வழங்கினாராம். நான்கு மணிகளும் ச ரி க ம என்ற நான்கு ஸ்வரங்களை ஒலியாக எழுப்புகின்றன. இந்த மணியோசை 5 கிமீ தூரம்வரை கேட்கிறது. மணிகளின் மேல் வழங்கப்பட்ட ஆண்டு கொடுத்தவர் பெயர் லண்டனில் தயாரிக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்டுள்ளது.mm

ஸ்பெயின் நாட்டில் ஆபீஸில் வேலை செய்யும் ஊழியர்கள் அவ்வப்போது குட்டித்தூக்கம் போடுவதற்காக அந்தந்த நிறுவனங்கள் தனியறை வசதிகளை செய்து தந்திருக்கின்றன. இப்படித் தூங்கி எழுவதால் உடல் புத்துணர்ச்சியடைகிறது. இரட்டிப்பு புத்துணர்வுடன் அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பதால் உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.download-1

மைசூரை ஆண்ட மகாராஜா நால்வடி கிருஷ்ண ராஜ உடையார் ஒரு போஜனப் பிரியர். அவருக்கு விதவிதமாக சமைத்துக் கொடுத்து அசத்துவார்  தலைமை சமையல்காரரான காகசுரா மாதப்பா. ஒரு சமயம் சர்க்கரை நெய் மற்றும் கடலை மாவைக்கொண்டு புதிய இனிப்பை செய்தார் மாதப்பா.  அதன் ருசியில் மயங்கிய மன்னர் அந்த இனிப்பின் பெயரென்ன என்று கேட்டார். அவரும் மைசூர் பாகா என்று சட்டென்று கூறினார். கன்னடத்தில் பாகா என்றால் சர்க்கரை பாகு என்று பொருள். அதுவே இப்போது உலகப் புகழ்பெற்ற மைசூர் பாகு ஆயிற்று.socra

நடக்கும் மரம் என்று சொல்லப்படும் சொக்ரேட்டியா எக்ஸார் ஹிஸா வெயிலைத் தேடி தினமும் இரண்டு செமீ நடந்து செல்லுமாம். லத்தின் அமெரிக்காவில் உள்ள மழைக்காடுகளில் இந்த மரங்கள் உள்ளன. மரத்தின் வேர்கள் வெளிப்பக்கமாகத் தெரியும். புதிய வேர்கள் முளைத்ததும் பழையவை தானாகவே மடிந்துவிடும். புதிய வேர்கள் சுமார் 20 மீட்டர் வரை சென்று நிலத்தில் பதிவதால் மரம் இடம் பெயர்வதாகத் தெரிகிறது என்கிறார் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர் பீட்டர் விசான்ஸ்கி.download

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சிலி நாட்டுக்கு அருகே அமைந்துள்ள ஈஸ்டர் தீவு மனிதர்களே இல்லாத ஒரு மர்மத்தீவாகும். இங்கு 1200 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட மோவாய் எனப்படும் பறவை மனிதன் உருவக் கற்சிலைகள் 900க்கும் மேல் உள்ளன. 10மீ உயரமும் 80 முதல் 250 டன் எடையும் உள்ள இச்சிலைகள் பார்ப்பதற்கு வியப்பளிக்கின்றன. இச்சிலைகளை நிறுவ இடம் வேண்டி  பல மரங்களை வெட்டிச் சாய்த்ததில் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று நரமாமிசம் சாப்பிட்டதில் அங்கு மனித இனமே அழிந்துவிட்டதாம்.pacific-octopus

உருவத்தால் மட்டுமல்லாமல் குழந்தைகளை உருவாக்கிக் காப்பதிலும் ஆக்டோபஸ்கள் வித்தியாசமானவை. பெண் ஆக்டோபஸ் கருத்தரித்தவுடன் கடலுக்கடியில் ஒரு பாதுகாப்பான பொந்தைத் தேடி போகிறது. பின் அந்தப் பொந்திலேயே  ஆயிரக்கணக்கான முட்டைகளை இடுகிறது. முட்டைகள் மீது தூசு படியாமல் இருக்கவும் ஆக்ஸிஜன் கிடைக்கவும் நீவி விட்டுக்கொண்டே இருக்கிறது. முட்டைகள் வளர்ந்து குஞ்சுகள் வெளிவரும் நிலையில் பல நாட்கள் எங்கும் போகாமல் ஒன்றுமே சாப்பிடாமல் அதே பொந்துக்குள் இருக்கும் தாய் ஆக்டோபஸ் மரித்துவிடும்.

 

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s