நியூ[ஸ்]மார்ட்

download-1

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது உதவியாளராகவும் துணை தகவல் தொடர்பு மற்றும் ஆராய்ச்சி இயக்குனராகவும் அமெரிக்க வாழ் இந்தியரான ராஜ் ஷாவை நியமித்துள்ளார். 30 வய்தான இவர் குஜராத் மானிலத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். ஏற்கெனவே வள்ளை மாளிகையில் துணை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியதாகச் செய்திகள் கூறுகின்றன.solar-panel-rail

தென்னக ரெயில்வெ முதல் முறையாக ஜன சதாப்தி ரயிலில் சூரிய ஒளி எரிசக்தியாக ஒரு கோச் மேல் சோலார் பேனல்களைப் பொருத்தியுள்ளது. காற்றின் வேகம் ரயிலில் அதிர்வு இவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓர் உலோக அமைப்பின் மேல் இவை பொருத்தப்பட்டுள்ளன.  ஒவ்வொரு கோச்சிலும் வருடத்துக்கு 100 லிட்டர் டீசலை மிச்சப்படுத்தவும் 36 மின் விசிற்கள் 58 விளக்குகளை எரிய வைக்க்வௌம் முடியும். விரைவில் பழையவற்றுக்குப் பதிலாக புதைய எல் ஈ டி விளக்குகளும் பின்னர் ரயில் முழுவதும் சோலார் பேனல் விளக்குகளும் அமைக்கப்படும்.arti

சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் இரு மலைப்பிரதேச மாகாணங்களை இணைக்கும்படி 1854 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் 4 மணி நேரம் எடுக்கும் பயணம் ஒரு மணி நேரமாகக் குறையும். அதேபோல் உலகின் மிக நீளமான ரயில் பாதையும் சீனாவில் கிழக்குக் கடற்கரைப் பகுதியையும் தென்மேற்குப் பகுதியையும் இணைக்கும்படி 2252 கிமீ தூரத்துக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகம் மணிக்கு 330 கிமீ.agni5-4

அணுசக்தி ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் நான்காவது சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 5000 கிமீ தொலைவிற்கும் அதிகமாகச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட இது இந்தியக் கிழக்குக் கடற்கரையிலிருந்து செலுத்தப்பட்டது. இந்தியா அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனையை 2012லும்  இரண்டாம் சோதனையை 2013லும் மூன்றாவதை 2015 லும் நடத்தியது. 17.5 நீளம் கொண்ட இது 50 டன் எடையை சுமந்து செல்லக்கூடியது.calvin-head-shot

நம் உடலில் இருக்கும் ஒரு உறுப்பு மெசென்ட்ரி என்ற பெயரில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரலை அடிவயிற்றில் ஒட்டி இணைக்கும் பலதிசு மடிப்புப்புக்களால் உருவான மிகச் சிறிய உறுப்பு. குடலை இணைப்பது தவிர ரத்தம் லிம்ஃபேடிக் திரவம் இவற்றை குடலுக்கும் மற்ற உறுப்புக்களுக்கும் இடையே செலுத்தும் மிக முக்கிய பணியைச் செய்கிறது. இதைக் கண்டுபிடித்தவர் அயர்லாந்தில் உள்ள லிமரிக் பல்கலைகழத்தின் அறுவைச் சிகிச்சைப்பிரிவு பேராசிரியர் ஜெ கால்வில் காஃபே  [ Dr. J Calvin Coffey ] என்பவர். இதன் மூலம் குடல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய வழிமுறைகள் காணலாம் என்று கருதப்படுகிறது. இந்த உறுப்பு லியர்னாடோ டாவின்சியின் உடல் பாகங்களில் காணப்பட்டாலும் இப்போதுதான் முழுமையான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.download

என்னதான் அலங்காரம் செய்துகொண்டாலும் வயதானால் கழுத்தில் தொங்கும் சதைகளை ஒன்றும் செய்ய இயலாது. அதற்காகவே நெக்சீ டேப் [ NEXSEY TAPE ] ஒன்றை  லிண்டா கோமெஸ் என்ற அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பாளர் உருவாக்கியிருக்கிறார். இதை கழுத்தின் பின்பகுதியில் தொங்கும் சதைகளை சேர்த்து ஒட்ட வேண்டும். வயதானவர்களுக்காகவே பிரத்யேகமாய் நெக்ஸியை உருவாக்கியதாகவும் இதைப் பயன்படுத்துவதால் வலி இருக்காது என்றும் தவிர துணி மற்றும் தலைமுடியால் நெக்ஸியை மறைந்து விடலாம் என்றும் சொல்கிறார் லிண்டா.

Advertisements

One thought on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s