யார் துறவி?

puttar

புத்தனாவது சுலபம் ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது ? புத்தர்  ஞானம் பெற்றதும் தன் மனைவி குழந்தையை பார்க்கப் போகிறார். மனைவி கேட்கிறாள் ‘ என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லிவிட்டு போயிருக்கலாமே நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன்  ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்துவிட்டது ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்.”?

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத்தான் என்கிறார்.  மனைவி மகனின் முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கிவிடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.  அடுத்து அவர் மனைவி மிகச் செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இதுதான்  ‘ நீங்கள் இந்த அரண்மனையைவிட்டு போகாமல் இனேயே தங்கி  இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா? புத்தர் சொல்கிறார் ‘ தாராளமாக ‘ அதற்கு நான் மலை காடு ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லைதான். ஆனால் இங்கிருந்து ஓடிப்போகும்போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல. 7

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவதே இல்லை. புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக்கொண்டிருக்குமா?  ஓடுகாலி என்று சொல்லியிருக்கும்.  சரி புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது  அவளை வாழாவெட்டி என்றது.  அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்/  சாதாரணமாய் இருந்தாலே விடாது  உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு  எவ்வளவு போராடியிருப்பாள்?  புத்தர் போனதும் தன் தலையை மழித்துக்கொண்டாள்.  ஒற்றைப் பிள்ளையின் அப்பா எங்கே எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப்போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.  எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.  சொல்லுங்கள் யார் துறவி இப்போது ????/

 

பகிர்ந்ததில் சிந்திக்க வைத்த பதிவு இது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s