ஊஞ்சல்

img_2395

அந்தக் காலத்தில் பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் ஊஞ்சல் நடு நாயகமாக வீற்றிருக்கும். சோபா நாற்காலி இல்லாவிட்டாலும் ஊஞ்சல் நிச்சயம் இருக்கும்.  காலப்போக்கில் வீடுகளிலிருந்து ஊஞ்சல் மறைந்துவிட்டது. இதற்கு இடப்பற்றாக்குறையும் ஒரு காரணம். வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்துக்காகவும் ஊஞ்சல் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகின்றன  திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு  இதன் அடிப்படையிலேயே நடப்படுகிறது.  நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி ஊஞ்சலின் இருபக்கச் சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் பாய்ந்து மூளை சுறுசுறுப்படைகிறது.download

கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்து போன இன்றைய இளம் பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழிசெய்கிறது.  ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராகச் செல்லும். இதயத்திற்குச் சுத்தமான பிராணவாயுவை கொடுத்து இதயத்தைச் சீராக இயங்கச் செய்யும் தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுபவர்களுக்கு இதய நோய் கட்டுப்படும்.

சாப்பிட்டவுடன்  அரைமணி நேரம்  மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும்  கோபமாக இருக்கும்போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும்.  வெளியில் சுற்றி அலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையைச் சற்றே மேலே உயர்த்தி இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் மறந்து போய் உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.oonjal

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள். ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுபகாரியங்களைப் பற்றிப் பேசும்போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

Advertisements

4 thoughts on “ஊஞ்சல்

  1. ஊஞ்சல் பற்றிய அருமையான தகவல்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்

  2. மிகவும் நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s