ஆஹா தகவல்

beer

பராகுவே நாட்டில் உள்ள கைபிமென்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம்  அங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருக்குமாம். தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக அங்குக் கிடைக்கும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதில் அருந்துகிறார்களாம்images

தரையிலிருந்து காணும்போது நாம் வானவில்லின் அரை வட்டத்தை மட்டுமே காண முடியும்  ஆனால் முழு வட்டமாகவே வானவில் தோன்றுகிறது. அதை விமானத்தில் பயணிக்கும்பது காணலாம்.mission

மத்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நல மந்திரியான J P  நட்டாவால் 2014ல் டிசம்பர் 25ல் தொடங்கப்பட்ட அரசுச் செயல்முறைத் திட்டம் தான் மிஷன் இந்திர தனுஷ்  [ MISSION INDRA DHANUSH ] இதன் குறிக்கோள் 2020ம் ஆண்டுக்குள் தடுப்பு ஊசி கொடுக்கப்படாத அல்லது பகுதியாகக் கொடுக்கப்பட்ட இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளையும் கர்ப்பிணீப் பெண்களையும் முழு நலத்துடன் பேணிக்காப்பதுதான். தொண்டை அடைப்பான் கக்குவான் இருமல் தசை விறைப்பு காச நோய் ஈரலழற்சி தட்டம்மை இளம்பிள்ளைவாதம் ஆகிய 7 கொடிய நோய்களை முற்றிலுமாக ஒழிப்பதே  மிஷன் இந்திர தனுஷ் திட்டம்.42

வடக்கு இங்கிலாந்தில் ஆன்வித் என்கிற தோட்டம் உள்ளது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இங்கு ஒரு குறிப்பிட இடத்தில் 100 வகையான விஷச் செடிகள் கொண்ட ஒரு தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாசல் கதவுகளில் எலும்புக் கூடுகள் வரையப்பட்டு இங்குள்ள விஷச் செடிகள் உயிரைக்கொல்லக் கூடியவை என்ற எச்சரிக்கையும் உள்ளது. இங்கு செல்லும் பார்வையாளர்கள் அங்குள்ள செடி கொடிகளையும் தொடாமல் நுகராமல் வரவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தச் செடிகளை முகர்ந்தால் கூட பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்பட்டு சில நேரங்களில் மரணம் கூட நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.botfly

டீர் பாட்ஃப்ளை [ DEER BOTIFLY ] எனப்படும் மிகச் சிறிய பூச்சி எல்லா உயிரனங்களை விட அதிவேக சாம்பியனாகக் கருதப்படுகிறது. இந்தப் பூச்சியால் மணிக்கு 800 மைல் வேகத்தில் பறக்க முடியும் இது ஜெட் விமானத்தின் வேகத்தைவிட அதிகம்.download

ரோமானிய எண்கள் [ ROMAN NUMBERS ] எப்படி தோன்றின தெரியுமா?  பண்டைக்காலத்தில் ஜரோப்பிய நாடுகளில் ஆடு மேய்ப்பவர்கள் தங்களின் ஆடுகள் அனைத்தும் திரும்பிவிட்டனவா என்பதை தெரிந்து கொள்ள பட்டியில் ஆட்டை அடைக்கும்போது ஒவ்வொரு ஆட்டுக்கும் ஒரு சிறிய கல்லை அடையாளப்படுத்தி வந்தனர். நாளடைவில் ஆயிரக்கணக்கான ஆடுகளை கணக்கிட அத்தனை கற்களையும் பத்திரப்படுத்த வேண்டியிருந்தது. எனவே நான்கைந்து  சிறிய குச்சிகளை வைத்து கணக்கிடத் தொடங்கினார்கள். I II  III  IV V VI VII VIII IX X என்று அவர்களாக மாற்றி மாற்றி வைத்து கணக்கிட்ட இந்த முறை மிக எளிமையாகத் தோன்றவே பிற்காலத்தில் எல்லோரும் இதையே பின்பற்றினர். இதில் C D L  போன்ற வடிவங்களை எண்ணாகவே பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் அதை ஆங்கில எழுத்து  C  D  L   என்று தவறாக  நினைத்து வருகிறோம்.

 

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

  1. மிகவும் நன்றி தனபாலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s