முனைப்போடு செயல்பட்டால்……………….

 

வாழ்வில் வெற்றி பெறுவதன் ரகசியமென்ன? வாழ்க்கையை மனத் திண்மையோடு அதன் போக்கில் எதிர்கொள்ளுதலே  வாழ்வில் மறைந்திருக்கும் ரகசியமும் அதைத் தொடர்ந்து வரும் வெற்றியும் அன்றாடம் நாம் நம் வேலைகளில் எது முதன்மையானது எது அதன் பின் வருவது என்று வரிசைப்படுத்தி நம் மனதைக் குவித்து ஈடுபட பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இது நடக்குமோ இது நடக்காதோ என்கிர எதிர்மறை எண்ணங்களை அறவே ஒதுக்கித்தள்ளி நம்பிக்கையுடன் கற்றுக்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக ஒரு கதை இதோ.swollen-doe

கருவுற்றிருந்த மான் ஒன்று பிரசவிப்பதற்குத் தகுந்த இடம் ஒன்றைத் தேடி அலைந்து ஒரு நதிக்கரையில் அடர்ந்த புல்வெளியொன்றைத் தேர்ந்தெடுத்தது. அது பாதுகாப்பான இடமாக அதற்குத் தோன்றியது. அங்கு வந்து சேர்ந்ததும் அதற்குப் பிரசவ வலியும் ஆரம்பித்துவிட்டது. வலியினூடே அக்கம்பக்கம் நோட்டம் விட்டது. இடதுபக்கம் ஒரு வேடன் கையில் வில் அம்புடன் மானைக் குறிபார்த்தபடி நின்ரான். வலது பக்கம் பசியோடு ஒரு சிங்கம் மானின் மேல் பாயத் தயாராக இருந்தது. தலைக்கு மேலோ கருமேகங்கள் சூழ்ந்து பளீரென ஒரு மின்னல் தாக்க உடனே காட்டு மரங்கள் தீப்பற்றி காட்டுத்தீ ஏற்பட்டது.images

கருவுற்றிருக்கும் மானால் என்ன செய்ய முடியும்? அதுவோ பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது. இப்போது என்ன நடக்கும் மான் பிரசவித்து ஒரு குட்டி மாலனை ஈனுமா/ அந்த குட்டி மான் உயிர் பிழைக்குமா? இல்லை காட்டுத்தீ எல்லாவற்றையும் எரித்து விடுமா/ இல்லை வேடனின் அம்புக்கு மான் இரையாகிவிடுமா/  ஒரு வேளை சிங்கத்துக்கு பலியாகி மாய்ந்துவிடுமா? மான் என்ன செய்யும்/

மான் அந்த நொடியில் தான் என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.  எதைப் பற்றியும் பயப்படாமல் எந்த எதிர்மறை எண்ணங்கள் தன்னை அணுகவிடாமல் தன் முழுக் கவனத்தையும் பிரசவிப்பதில் செலுத்தி அழகான ஒரு குட்டியை ஈன்றெடுக்கிறது. அடுத்த நொடி அடடா என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன அந்தக் காட்டில்.deer_calf_culzean05195a

மற்றொரு மின்னல் அடிக்க வேடனின் கண் பார்வை பறிபோகிறது.  அவனுடைய குறிதவறி சிங்கத்தின் மேல் அம்பு பாய சிங்கம் பரிதாபமாக மாய்ந்து போகிறது.  கருமேகங்கள் குவிய பெரு மழை ஆரம்பிக்கிறது.  காட்டுத்தீ மெதுவாக அணைந்து போகிறது. ச்க்தி வாய்ந்த நேர்மறை எண்ணங்கள் ஆபத்தான தருணங்களிலும் நம்மை எவ்வாறு வழி நடத்தி நம்மைப் பாதுகாக்கின்றன என்பதற்கு அந்த மான் ஓர் உதாரணமாகத் திகழ்கிறது.

படிப்பு அலுவலக வேலை வீட்டு வேலை எதுவாக இருந்தாலும் சரி கவனம் சிதறாமல் ஒன்று குவிக்கப்பட்ட மனம் முழு முனைப்பு மட்டுமே தேவை. அந்தந்த நேரத்தில் நம் கையில் இருக்கும் காரியங்களில் நாம் முனைப்போடு முழுக் கவனத்தோடு செயல்பட்டோமானால் அந்த ஈடுபாடே நமக்கு முழு நம்பிக்கையைக் கொடுத்து அந்தக் காரியம் வெற்றி பெற உதவும். நாம் அந்த மானிடமிருந்து இதைக் கற்றுக் கொள்வோமே/

நன்று  ரேவதி பாலு  மங்கையர் மலர்.

Advertisements

2 thoughts on “முனைப்போடு செயல்பட்டால்……………….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s