புவி போற்றும் புத்தாண்டு

 

.02

ஹங்கேரி

ஊர் மக்கள் எல்லாருமாகச் சேர்ந்து கொடும்பாவியை எரிக்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் சென்ற வருடத்தில் ஊருக்குள் வந்த கெட்ட சக்தியை அழிப்பதாக நம்புகின்றனர்.

ரோமானியர்கள்tall

புது வருடம் பிறந்தவுடன் கருமையான உயரமான மனிதரைப் பார்த்தால் அந்த வருடம் தங்களுக்கு அதிர்ஷ்டம் என்று நம்புகின்றனர்.

வட ஆப்பிரிக்காimages

புத்தாண்டு அன்று தீ மூட்டி அதை வணங்கிய பின் அதைத் தாண்டி செல்வர். அப்படித் தாண்டும்போது அவர்களது தவறுகள் பாவங்கள் தீக்கிரையாகிவிடுவதாக நம்புகின்றனர்.

ஜெர்மனிicec

புத்தாண்டு அன்று ஒரு சிறு  பனிக்கட்டியைக் கீழே போட்டு உருகவிடுகின்றனர் அது உருகி இதய வடிவில் மோதிர வடிவில் வந்தால் அந்த ஆண்டு திருமணம் நடக்கப்போவதாக அர்த்தம்.  கப்பல் வடிவில் வந்தால் பயணம்  பன்றி வடிவில் வந்தால் அந்த வருடத்தில் உணவுப் பொருட்களுக்குப் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை.

இங்கிலாந்து

ஜனவரி முதல் நாள் பொழுது விடிந்ததும் கையில் ரொட்டித் துண்டும் நிலக்கரிக் கட்டியும் வைத்துக்கொண்டு நண்பர்கள் வீட்டுக்குச் செல்வது வழக்கம். இப்படிச் சென்ரால் வீடுகளில் ஆண்டு முழுவதும் உணவுக்குப் பஞ்சமே இருக்காது என்கின்றனர்.

நியூகினியா2ca

இங்கு உள்ள பழங்குடி சமூகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனியாகப் புத்தாண்டு தினம் உண்டு.

ரோம் நகரில் நாற்பது நாட்கள் விரதமிருந்து பிறகே ஜனவரி முதல் தேதியை கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் அன்றுமுதல் ஏதும் சாப்பிடாத இவர்கள் ஜனவரி முதல் தேதியில் விரதத்தை முடித்து விதவிதமான இனிப்புக்களை உண்டு மகிழ்கின்றனர்.

புத்தாண்டு அன்று வாழ்த்துக்களுடன் பரிசுப் பொருள் தரும் வழக்கம் ஜப்பானியர்களிடையே உண்டு.  புத்தாண்டு அன்று வீட்டை சுத்தம் செய்தால் அதிர்ஷ்டம் வெளியேறிவிடும் என்று நம்புகின்றனர்.  ஜனவரி முதல் மூன்று நாட்கள் மகிழ்ச்சியாகப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s