போதி மரம்

90

வெங்கட் என்ற இளைஞன் படித்துவிட்டு வேலை இல்லாமல் இஉர்ந்தான்   நம்பிக்கை இல்லாத அவன் மனதில் விரக்தி குடியிருந்தது. அவனுக்கு வெற்றி என்றொரு நல்ல நண்பன் இருந்தான். அவனும் வேலை தேடிக்கொண்டிருந்தான்tree

ஒரு நாள் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. சாலையோரப் பூங்காவில் நிழலுக்காக நண்பர்கள் இருவரும் ஒதுங்கினர். ஒரு பட்ட மரம் காய்ந்து போன நிலையில் நின்றுகொண்டிருந்தது.  ஒரு இலை கூட இல்லை. அதைக் கண்டதும் வெங்கட்டுக்கு வருத்தம். மரமே நீயும் என்னைப் போலவே இருக்கிறாயே  என்னாலும் உன்னாலும்  யாருக்கும் பயனில்லை என்று சொல்லி அதைத் தடவி கொடுத்தான்.14d

வெற்றி அவனிடம் ஏண்டா இப்படிப் புலம்ப ஆரம்பிச்சுட்டே  கோடை மழை வந்து விட்டால் இந்த மரம் துளிர்விட ஆரம்பிக்கும் என்றான். சற்று நேரம் கழித்து அவர்கள் வீடு சென்று விட்டனர்.  நண்பன் சொன்ன அந்த வார்த்தைகள் மட்டும் வெங்கட்டின் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நண்பன் சொன்னதுபோலவே ஓரிரு நாளில் கோடை மழையும் பெய்தது. பூமி குளிர்ந்ததால் ஆங்காங்கே புல்  முளைத்தது. பூங்காவில் இருக்கும் பட்ட மரத்தைப் பார்க்கும் ஆவல் வெங்கட்டுக்கு வந்தது. அவன் அங்கு சென்று பார்த்தபோது நண்பன் சொன்னது போலவே பட்டமரத்தில் அங்காங்கே இளந்துளிர்கள் முளைத்திருந்தன. வெங்கட்டின் மனதிற்குள்ளும் நம்பிக்கை துளிர் விட்டது. நீ சாதாரண மரமல்ல எனக்கு ஞானம் அளித்த போதி மரம் என்று அதைக் கட்டிக்கொண்டான். நம்பிக்கையுடன் வேலை தேட ஆரம்பித்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s