நியூ[ஸ்]மார்ட்

63

இந்த வருடம் உலக அழகிப் போட்டி அமெரிக்கத் தலை நகர் வாஷிங்கடனின் புற நகர்ப் பகுதியான ஆக்ஸன்ஹில் நகரில் நடைபெற்றது. இதில் போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த 19 வயது மாணவியான ஸ்டெபானி உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இரண்டாம் இடத்தை மொமினிகன் குடியரசைச் சேர்ந்த யரீட்சா மிகுவலினா ரெயஸ் ரமிரெஸூம் மூன்றாம் இடத்தை இந்தோனிஷியாவைச் சேர்ந்த நடாஹா மேனுவலாவும் பெற்றனர்.priyad

உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரியதர்ஷினி சாட்டர்ஜி முதல் 20 அழகிகளில் ஒருவராக வந்தபோதும் பின்னர் முதல் 10 பேரின் பட்டியலில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.ff_1481884885

சவீதா வைத்ய நாதன் என்ற இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கலிஃபோர்னியா மானிலத்தில் கூப்பர் டீனோ நகரின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்/  எம் பி ஏ பட்டதாரியான சவீதா முதலில் ஒரு உயர் நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றியவர். பின்னர் வணிக வங்கி ஒன்றில் அதிகாரியாகவும் தன்னார்வ அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். கூப்பர் டீனோ நகரில் கடந்த 19 ஆண்டுகளாக வசித்து வரும் இவர் பதவியேற்ற பிறகு கல்வி தொடர்பாக தமது முதல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.download

சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய ஸ்பின்னர்களான அஸ்வின் முதலிடத்தையும் ஜடேஜா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.  ஐ சி சி ரேங்க்படி சர்வதேச தரவரிசையில் இந்திய அணி முதலிடத்துக்கு வந்துள்ளது  இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 15 புள்ளிகள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

CANBERRA, AUSTRALIA - JANUARY 20:  Virat Kohli of India looks on during the Victoria Bitter One Day International match between Australia and India at Manuka Oval on January 20, 2016 in Canberra, Australia.  (Photo by Mark Metcalfe - CA/Cricket Australia/Getty Images)

அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேச் செய்துள்ளது. தொடர்ச்சியாக 18 டெஸ்ட் போட்டிகளில் 14 மேட்சுகளை கேப்டன் விராட் கோலி தலைமையில் வென்றுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைத் தேடிக்கொடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி பெற்றுள்ளார்.  இவர் தலைமையில் 14 வெற்றிகள் கிடைத்துள்ளன.cv

யூனிசெஃப் அமைப்பின் புதிய சர்வதேச நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். யூனிசெஃப் என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தொடங்கி 70 ஆண்டுகள் நிரைவு பெறுவதையொட்டி நியூயார்க்கிலுள்ள ஐ நா சபை தலைமை அலுவலகத்தில் சென்ற வாரம் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் யூனிசெஃப்பின் புதிய சர்வதேச நல்லெண்ணத்தூதராக பிரியங்கா சோப்ராவின் பெயரை பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்கம் பிரிட்டன் நடிகை மில்லி பாபி பிரவுன் ஆகிய இருவரும் அறிவித்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் யூனிஃசெப் அமைப்பில் இணைந்த பிரியங்கா சோப்ரா அமெரிக்க தொடர் நாடகமான குவான் டிகோ மூலம் உலகப்பிரபலம் அடைந்தார். அடுத்தாண்டு வெளியாக உள்ள பேவாட்ச் ஆங்கிலத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

2 thoughts on “நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s