உதறித் தள்ளுங்கள்

OS18033

ஒரு விவசாயியின் வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று  தவறி அவர் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதை எப்படி கிணற்றிலிருந்து காப்பாற்றுவது என்று அவர் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக் கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை  என்பதால் அதை காப்பாற்றுவது வீண் வேலை என்று முடிவு செய்த அவர் கழுதையுடன் அப்படியே அந்தக் கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தார்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளிக்கொண்டு வந்து அந்தக் கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது . ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளிக் கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.SEP 2012 Pages.pmd

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க அவர் பார்த்த காட்சி அவரை வியப்பிலாக்கியது. ஒவ்வொரு முறையும் மண்ணைக் கொட்டும்போது கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு மண்ணை கீழே தள்ளி அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணிப் போடப் போட கழுதை தனது முயற்சியை கைவிடாது உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்து விட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும் மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்தக் கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.

Advertisements

2 thoughts on “உதறித் தள்ளுங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s