கிறிஸ்துமஸ் துளிகள்

download

1831 ல் கிறிஸ்துமஸ் வாரத்தில் சார்லஸ் என்ற புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் தம் ஆராய்ச்சிகளுக்காக ஹெச் எம் எஸ் பீகின் என்ற கப்பலில் பிரயாணம் மேற்கொண்டார்.

1974ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்றுதான் ஆஸ்திரேலியாவிலுள்ள பார்வின் நகரம் புயலால் பலத்த சேதமடைந்தது.

ஸ்வீடன் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வீட்டிலுள்ள கன்னிப் பெண்களுக்கு கிரீடம் சூட்டி அலங்கரிப்பர். கன்னிப்பெண்கள் தான் வீட்டில் எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் கேக் கொடுப்பார்கள். அது அந்த நாட்டு சம்பிரதாயம்

பைபிள் முதன் முதலாக மொழிபெயர்க்கப்பட்டது தமிழில்தான். ஸ்பெயின் நாட்டவரான சீகன் பால்கு என்பவர் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார்.

குமரி மாவட்டத்தில் கங்கான் கடை என்னும் புராதன ஊர் உள்ளது. இவ்வூரிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிலுவைக்கு வெண்ணெய் அபிஷேகம் செய்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தாத்தாவை ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள். இத்தாலி பெபனா……..ரஷ்யா பாஸ் போச்கா…..டென்மார்க்  ஜூலினிசி…….ஜப்பான் கான்டா குரோக்சு……………பிரேசில்  பாபா நோயல்…………….பிரான்ஸ்  பியர் நோயல் …………ஸ்வீடன் ஜல்டடோம்டன்……………….பின்லாந்து  ஓல்டுமேன் கிறிஸ்துமஸ்……………..இங்கிலாந்து  ஃபாதர்  கிறிஸ்துமஸ்

பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் நாளை நோயல் என்றும் ஸ்காட்லாந்தில் யூல் என்றும் இத்தாலியில் நாட்டலியே என்றும் ஸ்பெயினில் நேவிடட் என்றும் அழைக்கின்றனர்.36

கிறிஸ்துமஸ் மரத்தைப் பற்றிய அச்சிடப்பட்ட முதல் குறிப்பு 1531 ல் ஜெர்மனியில் பிரசுரிக்கப்பட்டது.

பான்செட்டியா என்பது ஒரு வகைப்பூ. இது மெக்சிகோ மக்களின் பாரம்பரிய கிறிஸ்துமஸ் பூவாகும். இதன் அசல் பிறப்பிடமும் மெக்ஸ்கோதான். மெக்ஸிகோ மக்கள் இப்பூவை புனித இரவின் பூ [கிறிஸ்துமஸ் பிறந்த இரவு ] என்று அழைக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் கேக்கில் நாணயம் மோதிரம் போன்றவற்றை மறைத்து வைத்துப் பரிசளிப்பதும் சில நாடுகளின் வழக்கம். நாணயம் கிடைக்கப்பெற்றவர் செல்வந்தர் ஆவார் என்றும் மோதிரம் கிடைத்தால் விரைவில் திருமணமாகும் என்றும் நம்பிக்கை.

கம்யூனிஸ நாடான சீனாவிலும் ஈரான் போன்ற முஸ்லிம் நாடுகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஈரானிய கிறிஸ்துவர்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் நோன்பு இருப்பார்கள். இதை சிறு நோன்பு என்று அழைக்கின்றனர்.

சீனாவில் கிறிஸ்தவம் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்ட மதமல்ல என்றாலும்கூட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கின்றன. கிறிஸ்துமஸ் நாளில் வீடுகளில் அலங்கரித்து வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே அன்பு முத்தங்களையும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வது பல நாடுகளில் வழக்கமாக இருந்து வருகிறது. அமைதி மற்றும் நட்புறவின் அடையாளமாக கிறிஸ்துமஸ் மரம் கருதப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s