குட்டிச் செய்திகள்

vara

வரலட்சுமி பெயர் காரணம்

சவுராஷ்டிர நாட்டின் ராணியான் சுசந்திராவிடம் ஏராளமான பணம் இருந்தது. இது தந்த அகங்காரத்தால் மஹாலட்சுமியைவிட தானே பெரியவன் என பேசி வந்தாள். அத்துடன் அடாத செயல்களையும் செய்தாள். பணம் என்பது நற்காரியங்களுக்கே பயன்படுத்தபட வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பிய லட்சுமி அவளிடமிருந்த செல்வத்தைப் பறித்து ஒரே நாளில் ஏழையாக்கி விட்டாள். சுசந்திராவின் மகள் சாருமதி  லட்சுமி தாயாரிடம் மன்னிப்பு கேட்டு விரதம் அனுஷ்டித்தாள்.’

கருணைக் கடலான மஹாலட்சுமித் தாய் அவளுக்கு சகல நன்மைகளையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பின்பற்றி லட்சுமி விரதம் கடைப்பிடித்து இழந்ததை மீண்டும் பெற்றாள். இழந்ததைப் பெற வரம் அருளியதால் மஹாலட்சுமிக்கு வரலட்சுமி என்று பெயர் ஏற்பட்டது.

நாக பஞ்சமிnagapanchami-3

நாக பஞ்சமி மற்றும் கருடபஞ்சமி தினம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் வருகிறது.  இந்த நாளில் சகோதரிகள் சகோதரர்களின் நல்வாழ்வு கருதி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒரு காலத்தில் ஒரு பெண்ணின் ஐந்து சகோதரர்களை பாம்பு ஒன்று விரட்டி விரட்டி தீண்டி  அவர்களைக் கொன்று விட்டது. பெற்றவர்களை ஏற்கனவே இழந்து விட்ட அந்தப் பெண் அனாதையாகி விட்டாள் அவள் ஆதிசேஷன் மீது துயில்கொள்ளூம் பெருமாளை மனதில் எண்ணி தன் சகோதரர்கள் மீண்டும் தனக்கு வேண்டும் என்று கதறியழுதாள். அவளது மனம் ஒன்றிய வேண்டுதலால் இரக்கப்பட்ட திருமால் அந்த சகோதரர்களை உயிர் பிழைக்கச் செய்தார். பஞ்சமி என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணின் பெயரால் இந்த நாளுக்கு நாக கருட பஞ்சமி என்று பெயர் வந்தது. அன்று முதல் அண்ணன் தம்பிகளின் நல்வாழ்வுக்காக சகோதரிகள் அனுஷ்டிக்கும் நிகழ்வாக இது மாறியது. அன்று பகலில் மட்டும் சாப்பிடாமல் திருமாலுக்குரிய பாடல்கள் ஸ்லோகங்கள் சொல்லி பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.naga

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s