கிறிஸ்துமஸ் துளிகள்

பாக்சிங் டேboxing-day

கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பாக்சிங் டே என்று கொண்டாடப்படுகிறது. பெயரைக் கேள்விப்பட்டதும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கையோடு கிறிஸ்துவர்கள் குத்துச்சண்டை போடுவார்கள் போலிருக்கிறது என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டப் பழக்கத்தில் சர்ச்சுகளில் ஒரு பெட்டி வைத்திருப்பார்கள். வசதி படைத்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காக அந்தப் பெட்டிகளில் பணம் போடுவர். ஆண்டுக்கு ஒரு மு/றை கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பெட்டியை திறந்து பணம் எண்ணப்படும் அதைக் கொண்டு ஏழைகளுக்கு உதவிகள் செய்யப்படும் அதற்குப் பெயர்தான் பாக்சிங் டே.download

ப்ளம் கேக்plumcake-700x700

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் ப்ளம் கேக் செய்வார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முன்னிலையிலும் கேக் செய்வதற்குரிய் மாவைக் கொட்டி அவர்கள் அனைவரும் சேர்ந்து பிசைவர். தன் பங்காக அக்குடும்பத்தின் தலைவி ரகசியமாக வெள்ளியிலான ஒரு பென்னி நாணயத்தை மாவுடன் கலந்து விடுவார். இறுதியாக உருவாக்கப்பட்ட கேக் ஒரு மறைவிடத்தில் வைக்கப்படும். கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்தக் கேக்கை எடுத்து குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரிமாறுவர். உண்ணும்போது யாருக்குக் கேக்கிலிருந்து வெள்ளிக் காசு கிடைக்கிறதோ அவர் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டு அனைத்துப் பரிசுகளும் அவருக்கே வழங்கப்படும்.download-1

கிறிஸ்துமஸ் வாழ்த்து கார்டுfirstchristmascard

15ன்  நூற்றாண்டில் மரத்தில் செதுக்குவேலை செய்யும் வல்லுனர்கள் இந்த நாள் கிறிஸ்துமஸ் கார்டுகளைப்போலவே வாசகங்களும் சித்திரங்களும் பொறித்து வந்தார்கள். இதன் பின் 18, 19 நூற்றாண்டில்தான் வாழ்த்துக்கடிதங்கள் வெளியாகின. 1843ம் ஆண்டில் முதன் முதலாக இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கார்டு வெளியானது. தன் நண்பரான சர் ஹென்றிகோல் என்பவருக்கு ஹார்ஸ்லி என்பவர் கார்டு தயாரித்துக் கொடுத்தார். தடித்த அட்டைக் காகிதத்தில் லித்தோ முறையில் அச்சிடப்பட்ட கார்டு அது. கிறிஸ்துமஸ் இன்பம் நிறைந்த புத்தாண்டு என்று ஒரு குடும்ப விருந்துக் கூட்ட காட்சியின் சித்திரத்தை தாங்கி இருந்தது கார்டு.

 

கிறிஸ்துமஸ் தாத்தாdownload-2

ஹாலந்து நாட்டில் புனித நிக்கோலஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா பிஷப் உடையில் குதிரை மீது அமர்ந்து  வருவார். பரிசுகள் கொடுப்பார்.  பிரான்ஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா பாபா நோயல் என்று அழைக்கப்படுகிறார். இவர் வீடுகளில் புகைபோக்கி வழியாக இனிப்புகளையும் பொம்மைகளையும் போட்டுவிட்டுச் செல்வார். கிரீஸ் நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா புனித வாலஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இவர் சிவப்பு உடை அணிந்து கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவார்.santa-claus-02

புனித ஜோஸப் தேவாலயம்st-joseph-s-oratory-of

கனடா நாட்டின் தலை நகரான மான்டிரியலில் மிகப் பிரம்மாண்டமான புனித ஜோஸப் தேவாலயம் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தேவாலயம் இது. வழிபடவும் பார்த்து மகிழவும் ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கு மேல் மக்கள் வருகிறார்கள்.  இந்த தேவாலயத்தில் 56 மணிகள் உள்ளன. இந்த மணிகளின் நாதம் இனிமையானது. ரோமானியபாணியில் இத்தேவாலயத்தை எழுப்பியவர் சகோதரர் ஆண்ரே என்பவர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s