ஆஹா ஆலயங்கள்

shri

டேராடூன் முசௌரி சாலையில் அமைந்துள்ளது சிவபுரி என்னும் ஊர் இங்கு சக்தி வாய்ந்த ஸ்ரீபிரகாஷ் ஈஸ்வர் மகாதேவ் கோயில் அமைந்துள்ளது. அங்கு எப்போதும் காலையில் காராசேவும் பூந்தியும் நைவேத்யம் செய்து வழங்கப்படுகிறது. மதிய வேளையில் சாதம் பருப்புடன் ஐஸ்கிரீமும் நைவேத்யம் செய்து பிரசாதமாக அனைவருக்கும் வினியோகிக்கப்படுகிறது என்பது வியக்கத்தக்கது.large_100149483

புதுக்கோட்டை அருகே உள்ள திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் சிவன் கோயிலில் தல விருட்சம் கிடையாது. இக்கோயிலைச் சுற்றி சங்கு ஒலி கேட்கும்.  தூரத்துக்குள் கிணறு வெட்ட முயற்சித்தால் வேலையில் தடங்கல் ஏற்பட்டு நின்று விடுகிறது. இத்தலத்தில் சிவனும் நந்தியும் சுயம்பு மூர்த்தியாக உள்ளனர். தவிர இத்தலத்தில் நந்திதேவர் கொடி மரத்தின் அருகில் இல்லாமல் ராஜகோபுரத்துக்கு முன்னால் எழுந்தருளியுள்ளார்.navagraha-temple

ராம நாதபுரத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது தேவிபட்டணம். இங்குள்ள நவக்கிரக கோயில் வித்தியாசமானது. கடலுக்கு அருகே உள்ளது இந்தக் கோயில் ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் தேவிப்பட்டணத்தில் ஒன்பது கற்களை வைத்து ஒன்பது கோள்களாகப் பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால் விஷ்ணுவை வேண்டினார். பின்னர் கடல் அமைதியடைந்தது., இதனாலேயே இங்கு இன்றுவரை அலைகள் வீசுவதில்லை என்கிறார்கள். இந்த இடத்தில்தான் ராமர் சனி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்று புராணம் கூறுகிறது.photo4

கோவையை அடுத்த சூலூரில் திருவேங்கட நாதப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் துளசி தீர்த்தம் வழங்கியபின் சிறிதளவு மிளகு வழங்குகிறார்கள். மதியம் மிளகு நிவேதனம் செய்யப்படுகிறது.  பெருமாளின் வெப்பம் குறைய விசேஷ நாட்களில் பச்சரிசியை ஊறவைத்து சர்க்கரை ஏலக்காய் தேங்காய் துருவல் ஆகியவற்றைக் கலந்து படைப்பதும் உண்டு. இக்கோயிலில் பெருமாளுக்கு நேராக  நந்தி இடம் பெற்றிருப்பது தனிச் சிறப்பு.download

கேரளாவில் தலைசேர்க்கும் கண்ணூருக்கும் இடையில் காடுகள் நிரம்பிய முளைக்கண்ணு என்னும் ஊரில் மலை மீது கம்பீரமாக அமைந்துள்ளது மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோவில். மணலில் இருந்து தயாரிக்கப்பட்ட கருவி என்று நேரடிப்பொருள் கொண்டிருக்கும் இசைக் கருவியான மிருதங்கத்துக்கு என்று பிரத்யேகமாக அமைந்து இருக்கும் கோவில் இது. மிருதங்க கலைஞர்கள் பெருமை கொள்ளும் இக்கோயிலில் வெள்ளை இலை அரசமரம் ஒன்று உள்ளது.

Gitai Mandir
Gitai Mandir

மகாராஷ்டிராவிலுள்ள வார்தா நகருக்கு அருகில் சிலையும் கூரையும் இன்றி ஒரு கோயில் இருக்கிறது இதை கீதைக் கோயில் என்று அழைக்கிறார்கள்  இங்கு 700 பளிங்குக் கற்களில் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள சுலோகங்களை மராத்திய மொழியில் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

Advertisements

2 thoughts on “ஆஹா ஆலயங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s