ஆஹா தகவல்கள்

download-1

தேர்தலில் நாம் அளிக்கும் வாக்கு என்ற சொல்லை ஆங்கிலத்தில் வோட் [vote] என்று கூறுகிறோம். வோட் என்ற சொல் [ voice of taz payers evory ] என்பதன் சுருக்கமாகும். வரி செலுத்துவோரின் குரல் என்பது அதன் பொருள். காலப்போக்கில் எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டதால் வரி செலுத்தாதவர்கள் வாக்கும்  vote என்றே குறிப்பிடப்படுகிறது.aedesvestae1

ரோமில் நானூற்று ஐம்பது தேவாலயங்கள் உள்ளன. இவற்றுள் பாந்தியன் கோயில் மிகவும் பழைமையானது. கி மு 27ம் ஆண்டில் கட்டப்பட்டது வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் கதவுகள் பித்தளையால் ஆனவை. கோயிலில் உச்சிக்கூரை கிடையாது. ஆலயத்தில் நடுவட்ட பகுதியைச் சுற்றி சுவரில் பன்னிரெண்டு ஜன்னல்கள் உள்ளன. மேற்கூரையில் இடைவெளி ஒளி எந்த ஜன்னல் மேல் விழுகிறதோ அது அப்போதைய நேரத்தைக் குறிக்கும். உதாரணமாக  ஐந்தாம் எண் ஜன்னல் மீது ஒளி விழுந்தால் மணி அப்போது ஐந்து. நம் முன்னோர்களின் திறமையை என்னவென்று சொல்வது.solar-pan

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க சோலார் தகடுகள் பயன்படுகின்றன.  சூரிய ஒளி படும்படி வெட்ட வெளியிலோ அல்லது வீட்டின் மேற்கூரைகளிலோ சோலார் தகடுகளைப் பொருந்த வேண்டும் இதனால் செலவு அதிகமாகிறது என்பதோடு வீட்டின் அழகும் கெடுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் வீட்டின் மேற்கூரையில் வேயப்படும் ஓடுகளைப் போலவே சோலார் தகடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு ஓடு போல இருக்கும் இந்த சோலார் தகடுகள் சிறப்பு வாய்ந்த கண்ணாடியால் தயாரிக்கப்படுகின்றன. வெவ்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் கிடைக்கின்றன. இதைப் பொருத்துவதற்கான செலவும் குறைவு.fb_vc_1

பதினான்கு வருடங்களுக்கு முன் விளையாட்டாக கேமராக்களை சேகரிக்க ஆரம்பித்து இன்றைய லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமரா உட்பட 4800 கேமராக்களைக் கொண்ட வின்டேஜ் அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஓவியர் ஏ பி ஸ்ரீதர் என்பவர்.  11 கிராம் எடையுள்ள மிகச் சிறிய கேமரா முதல் உலகின் மிகப் பெரிய அதிக எடை கொண்ட தி மம்மோத் வரை இதில் அடங்கும். உலகப் போர்களில் பயன்படுத்தப்பட்ட புறா கேமரா பிஸ்டல் கேமரா வாக்கிங் ஸ்டிக் கேமரா மற்றும் உலகின் முதல் 3D கேமராக்களைக்கூட சேகரித்து வைத்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் அருங்காட்சியகமே கேமரா வடிவில் வடிவமைக்கப்பட்டதுதான்.katori

டோக்கியாவில் ஹிடெதோஷி கடோரி என்ற விஞ்ஞானி தலைமையில் பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் உலகிலேயே மிகத் துல்லியமாக நேரத்தைக் காட்டும் கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. லேசர் ஸ்ட்ரோணிய அணுசக்தியால் இயங்கும் அது 1600 கோடி ஆண்டுகளில் தான் ஒரு வினாடியை இழக்கக்கூடுமாம். சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாமல் மைனஸ் 180 டிகிரி செல்சியில் ஒரு பேழையில் அது பாதுகாக்கப்படுகிறது. அது வரை இந்த உலகம் இருக்குமா என்பதுதான் சந்தேகம்.download

மாவீரன் நெப்போலியன்தான் செவாலியே விருதை அறிமுகப்படுத்தியவன்.  1802ம் ஆண்டுதான் முதன்முதலாக இவ்விருது வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் போர்க்களத்தில் அபார சாதனை புரிந்த போர் வீரர்களுக்கே செவாலியே விருது வழங்கப்பட்டு வந்தது.

 

2 thoughts on “ஆஹா தகவல்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s