வெந்ததும் வேகாததும்

jj

சிவபெருமானை  நேருக்கு நேராக தரிசித்தவர் நாமதேவர் என்னும் பக்தர்  அவர் நினைத்த போதெல்லாம் எதிரில் நிற்பார் சிவபெருமான். அதன் காரணமாகவே அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. ஒரு முறை சட்டி பானை செய்யும் கோராகும்பர் என்பவர் வீட்டில் பஜனையும் அதையொட்டி விருந்தும் நடந்தது. அவ்விருந்திர்கு சென்றிருந்தார் நாமதேவர்.

அப்போது கோராகும்பரே…………உங்களுக்கு வெந்த பானை எது வேகாத பானை எது என்பது தெரியுமே………… வந்திருக்கும் பக்தர்களில் வெந்த பானை எது வேகாத பானை எது என்று கூறுங்கள் எனக் கேட்டனர். பக்தர்கள் சிலர்.  நம் உடம்பு தான் பானை வெந்ததென்ரால் நற்குணம் உள்ளது என்பது பொருள். பக்தர்கள்  கேட்டதன் பொருள் புரிந்த  கோராகும்பர் நாமதேவரின் தலையை தட்டிப் பார்த்து இது தான் வேகாத பானை…………… என்றார். அனைவரும் சிரித்தனர். கடும் கோபத்துடன் எழுந்து  வெளியே சென்ற நாமதேவர் சிவபெருமானை நினைத்தார். அவருக்கு காட்சியளித்த சிவபெருமான் குருவின் உபதேசம் பெறாததால் உன் மனம் பக்குவம் அடையவில்லை. அதனால் ஞான தேவரிடம் சென்று உபதேசம் பெற்றுக் கொள்…………………. என்றார். அதையே ஞானதேவர் கனவில் வந்து கூறினார் சிவபெருமான். முரடனாயிற்றே………………….அவனுக்கு எப்படி உபதேசிப்பது…………..என்று சிந்தித்த ஞானதேவர் நாமதேவர் வரும்போது சிவலிங்கத்தை நோக்கி கால் நீட்டி படுத்தார்.

ஆசிரமத்திற்கு வந்த நாமதேவர் ஞானதேவர் படுத்திருக்கும் நிலை பார்த்து என்ன இது அக்கிரமம் இறைவன் இருக்கும் திசை நோக்கி காலை நீட்டி படுத்திருக்கிறீர்களே …………… என்றார் கோபத்துடன். அப்பனே ………………. காலை தூக்கும் சக்தியிருந்தால் இப்படி செய்வேனா…………….. நீயே என் காலைத் தூக்கி சுவாமி இல்லாத இடமாக பார்த்து வை…………..என்றார். ஞானதேவர் வேண்டா வெறுப்பாக காலை தூக்கி வேறொரு திசையில் வைக்கப் போன போது அங்கு சிவலிங்கம் காட்சியளித்தது. இப்படியே  நான்கு திசைகளிலும் சிவலிங்கம் தென்பட்டதால் ஞானதேவரின் பாதங்களை நான்கு முறை பிடிக்க நேரிட்டு குருவை நான்கு முறை பிடிக்க நேரிட்டு குருவை நான்கு முறை நமஸ்கரித்தது போன்று ஆகிவிட்டது. இதன் காரணமாக நாமதேருக்கு ஞானோதயம் பிறக்க ஐயனே…………உங்கள் திருவடி திரும்பும் பக்கமெல்லம் சிவ தரிசனம் கிடைக்கிறதே…………. அப்படியானால் நீங்களே எனக்கு குரு. உபதேசம் செய்யுங்கள் என வேண்டினார் நாமதேவர்.  தான் என்ற கர்வம் அகன்ற நாமதேவருக்கு உபதேசம் செய்தார் ஞானதேவர்  பக்குவப்பட்ட வெந்த பானையாக மாறினார் நாமதேவர்.

பக்த விஜய கதைகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இந்த நாமதேவர் என்னும் பக்தர். பக்தியில் கர்வம் கூடாது என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s