நன்மை தரும் நல்லெண்ணெய்

201

ஆரோக்கிய இதயம்

நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும்போது அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீஷியம் இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்

நல்லெண்ணெயில் ஜிங்க் எனும் கனிமச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும்  எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் கால்சியம் உணவுகளுடன் நல்லெண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது.12

செரிமான பிரச்னை

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய் எண்ணெயைவிட நல்லெண்ணெய் மிக லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது குடலியக்கமானது சீராக செயல்பட்டு  செரிமானப் பிரச்னை வராமல் இருக்கும்.

சுவாசக்கோளாறு

நல்லெண்ணெயில் ஆன்டி ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால் இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புக்கள் நீங்கி சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும் அதிலும் ஆஸ்துமா நோயாளிகள் இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம் இரத்த அழுத்ததைக் குறைக்க பெரிதும்  உதவியாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும்.

பளிச் பற்கள்

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணையால் வாயை கொப்பளித்தால் பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

புற்று நோய்

நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிரபைட்டேட் என்னும் புற்று நோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்துள்ளதால் இதனை உணவில் சேர்க்கும்போது உடலில் தங்கியிருக்கும் புற்று நோய் செல்களை அழித்து புற்று நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.

அழகான சருமம்

நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால் சருமத்தின் நெகிழ்வு தன்மை அதிகரித்து சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதிலும் கர்ப்பணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு வயிற்றில் மசாஜ் செய்தால் ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதை தவிர்க்கலாம்.sesame-18

புரோட்டின்

எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான்.  நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயைவிட அதிகமான 4.5  —- 5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே இது சைவ உணவாளர்களுக்கு ஒரு சிறந்த உணவுப்பொருள்.

எனவே  நல்லெண்ணெயை சமையலில் நிறைய பயன்படுத்தி வளமான வாழ்க்கையை வாழ்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s