பளீர் டிப்ஸ்

t_500_1395

இரவில் சப்பாத்தியோ பூரியோ மீதமாகிப் போனால் அவற்றுடன் தோலுடன் ஒரு உருளைக் கிழங்கைப் போட்டு மூடி வைத்தால் அப்படியே மிருதுவாக இருக்கும்.

தோசை மாவு நன்றாகப் புளித்துவிட்டால் அதில் சிறிதளவு பால் அல்லது ரவை சேர்த்தால் புளிப்புத் தன்மை நீங்கும்.1900150700_66b6815a26

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கைப்பிடியளவு ஜவ்வரிசியைப் போட்டு பொறித்தெடுத்து அதில் உப்பு மிளகுப்பொடி சிறிதளவு பெருங்காயப்பொடி போட்டுக் க்லந்தால் மொறு மொறுப்பான ஜவ்வரிசி மிக்சர் ரெடி. சாப்பிட சுவையாக இருக்கும்.p26a

மைக்ரோவேவ் ஒவனில் சாதம் பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்த பின்னர் சூடு செய்தால் அவை வறண்டு போகாமல் இருக்கும்.

குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறிது அரிசியை வறுத்து நைசாக அரைத்து  குழம்பில் கலந்துவிட்டால் அதிகப்படியான உப்பு குறைந்து விடும்.

பப்பாளிப் பழத்தை மிக்சியில் அரைத்து உப்பு மிளகுத்தூள் போட்டு ஐஸ் கட்டிகளை கலந்து சாப்பிட்டால் வெயில் நேரத்துக்கு இதமாக இருக்கும்.jeera_rice_in_tamil

சீரகம் மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து பொடி செய்து நான்கு அல்லது ஐந்து சிறிய வெங்காயத்தை நறுக்கிப் போட்டு வதக்கி உப்பு கலந்து சாதத்தை பிசையுங்கள்  ஜீரா ரைஸ் ரெடி.download

தீப்புண் தீக்காயம் ஏற்பட்டால் சோற்றுக்கற்றாழையின் உள்பசையை காயத்தில் தடவி வந்தால் குணமாகும் அதை சாப்பிட்டால் சீக்கிரமாகவே குணமாகும்

தண்ணீரில் ஓமம் கருஞ்சீரகம் வெந்தயம் சேர்த்துக்கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தேய்மான வலி குறையும்

இரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டால் வெல்லம் உப்பு எலுமிச்சைச் சாறு குடித்தால் சரிப்படும்.

இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கிளிசரினை கலந்து அதில் பட்டுத்துணிகலை அலசி உலர்த்தினால் பட்டுத் துணிகள் சுருங்காமல் இருக்கும். இழைகளும் விலகாமல் இருக்கும்.mixed-fruit-lassi

லஸ்சியில் சர்க்கரையை குறைத்து தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.250px-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81_%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81

குத்துவிளக்கில் சந்தனம் இட்டு ஈரத்துடனே ஜிகினாப்பொடியை வைத்துவிட்டு பிறகு நடுவில் குங்குமப்பொட்டு வைத்தால் விளக்கொளியில் ஜொலிக்கும்.

பாசிப்பருப்பை குழைய வேக வைத்து  ஏலக்காய்த்தூள் வெல்லம் கலந்து மசித்து உருண்டைகளாக்கி மைதா மாவை கரைத்து அதில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்தால் சுவையான டிபன் ரெடி

பச்சைப்பயி’று மாவுடன் கோதுமை தவிட்டைக் கலந்து குளித்தால் தோலில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.d109

உலர்ந்த நெல்லி முள்ளியுடன் பயத்தம்பருப்பு சேர்த்து அரைத்து உடலுக்குப் பூசி குளித்தால் சரும  நோய்கள் வராது.

மூக்கின் அருகில் கறுப்பு நிறம் இருந்தால் மோரில் பஞ்சை நனைத்து அதன் மீது தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் கறுப்புத் திட்டு காணாமல் போய்விடும்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s