தாமதமாக வந்த அன்பு மின்னஞ்சல்

email
என் உயிர்த் தோழியின் பேரன் அகஸ்தியா. அவள் சின்னப்பெண் சுஷ்மாவின் மகன். அவர்கள் அமெரிக்காவில் சான்டியாகோவில் உள்ளனர். 2006 மே 10ம் தேதி பிறந்தான். அவனை புகைப்படங்களில் பார்த்ததுதான் அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் என் பெண் பெங்களூரில் மாற்றலாகி போனபோதுதான் கிடைத்தது. 2009ல் நான் பெங்களூர் போனபோது அவனை என் தோழியில் இல்லத்தில் சந்தித்தேன். அவனுக்கு பிடிக்கும் என பழங்களினால் செய்த கஸ்டர்ட் செய்து எடுத்துக்கொண்டு போனேன் அதனை கஸ்டர்ட் என சொல்லத் தெரியாமல் அவன் என்னை ஐஸ்கிரீம் பாட்டி எனவே பேர் வைத்து விட்டான். என் தோழியை தோசைப் பாட்டி என கூப்பிடுவான். அவனது மழலை மிகவும் அருமையாக இருக்கும்
சின்னக்குழந்தையாக அவன் இருந்தபோதே சுஷ்மாவின் மெயில் ஐடிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவேன். புரிகிறதோ இல்லையோ அவனுக்கு காண்பிக்க சொல்வேன். அவனுக்கு மூன்று வயதானபோது அவனுக்கென்றே தனி மெயில் ஐடி உருவாக்கிவிட்டதாக சுஷ்மா சொன்னதின் பேரில் அந்த ஐடிக்கே அனுப்பிவிடுவேன். அவள் திறந்து காண்பிப்பாள் என நினைத்தேன். ஒரு வருடம் திறந்து காண்பித்ததாகவும் எனக்கு பதில் எழுதினாள். அதனால் அதற்கே தொடர்ந்து அனுப்புவதுடன் தீபாவளி குழந்தைகள் தினம் எனவும் வாழ்த்துக்கள் அனுப்ப தொடங்கினேன்.

அதற்கு எதற்கும் எனக்கு பதில் இல்லை. ஒரு முறை பேச்சுவாக்கில் கேட்டபோது அந்த மெயில் ஐடியை அவள் தற்சமயம் திறப்பதே இல்லை என சொன்னாள் அதனால் 2013க்கு பிறகு நானும் அனுப்புவதை நிறுத்திவிட்டேன். என் தோழிக்கே அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லும்படி சொல்லிவிடுவேன். இப்போது அவன் 10 வயது சிறுவன் ரொம்ப நன்றாகப் படிப்பதுடன் வாய்ப்பாட்டு புல்லாங்குழல் ஷட்டல் காக் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறான். இந்தியா வந்தால் என்னுடன் தொலைப்பேசியில் பேசுவான். அவனது மேடைக் கச்சேரி வீடியோக்களை என் தோழி எனக்கு அனுப்பி வைப்பாள்
மூன்று நாட்கள் முன்பு அகஸ்தியா ஸ்ரீதரன் என்ற மெயில் ஐடியிலிருந்து எனக்கு ஓர் அன்பு மின்னஞ்சல் வந்திருந்தது. இப்போது மின்னஞ்சல்களை அவனே பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டான் அதில் 2010 லிருந்து 2013 வரை நான் அனுப்பிய வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் பார்த்து மகிழ்ந்து அவை எல்லாவற்றிக்கும் நன்றி என அழகாக நான்கு வரிகள் எழுதியிருந்தான். மிக மிக சந்தோஷமாக இருந்தது. ஆறு வருடங்கள் கழித்து பதில் வந்த அன்பு மடல் கண்களில் நீரை வரவழைத்தது என்றால் மிகையாகாது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s