குட்டிச் செய்திகள்

soorya

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி தாய் வடிவில் வந்து ஒரு பெண்ணுக்க்கு பிரசவம் பார்த்தவர். இங்கு தான் நவக்கிரக நாயகனான சூரியனுக்கும் உஷாதேவிக்கும் திருமணம் நடந்ததாக ஐதீகம். அதன் அடிப்படையில் நவக்கிரக மண்டபத்தில் மற்ற கிரகங்களான் சந்திரன் புதன் வியாழன் சுக்கிரன் சனி ராகு கேது ஆகிய எட்டும் மணக்கோலத்தில் இருக்கும் சூரியன் உஷாதேவியை பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.large_114113976

கர்னாடக மானிலத்திலுள்ள நஞ்சன்கூடு கிராமத்தில் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. நஞ்சுண்டையா நீலகண்டன் என்னும் திரு நாமங்களைக் கொண்ட இவர் பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை அருந்தி உலகை காப்பாற்றியவர். இக்கோவிலில் தினமும் சுவாமிக்கு சுக்கு நெய் சர்க்கரை ஆகிய மூன்றும் கலந்த் சுகண்டித சர்க்கரை என்னும் கலவையை நைவேத்யம் செய்கின்றனர். இக்கோவிலில் ராஜகோபுரத்தை பார்த்தபடி கருங்கல் நந்தி ஒன்று உள்ளது. பக்தர்களை வரவேற்கும் விதத்தில் வாசலை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இந்த நந்தி எப்போதும் அலங்காரத்துடன் இருப்பதால் அலங்கார நந்தி எனப்படுகிறது.download8

பாரதியாருக்கு குள்ளச்சாமி என்ற மகானிடம் நட்பு ஏற்பட்டது. ஒரு நாள் புதுச்சேரி கடற்கரையில் குள்ளச்சாமி தன் முதுகில் சாக்குப் பையை சுமந்தபடி சென்றார். அதில் குப்பை இருந்தது. பதறிப்போன பாரதியார் என்ன சாமி? இப்படி குப்பையைச் சுமக்கலாமா? தூக்கி எறியுங்கள் என்றார்.  இந்த குப்பையை பெரிசா சொல்றியே நீ உன் மனசுக்குள்ள எவ்வளவு குப்பையைச் சுமந்திட்டிருக்க தெரியுமா? என்ரு சொல்லி சிரித்தார் சாமி. தன்னிடம் இருந்த குப்பையை தூர விட்டெறிந்தவர்  இதோ …………… நான் நொடியில் எறிந்து விட்டேன். உன்னால் இதுபோல முடியுமா/ என்று சொல்லி இரு  கைகளையும் தட்டிக் காண்பித்தார். மகானின் கேள்வி பாரதியாரை வெகுவாகப் பாதித்தது. கண்ணுக்குத் தெரியும் சாதாரண குப்பையை விட மனதிற்குள் பேராசை கோபம் வருத்தம் என எண்ணக் குவியல்கள் குப்பையாகக் கிடப்பதை நாம் உணர்வதில்லை. அவற்றைத் தூக்கி எறிய வேண்டியது அவசியம்.p81

பாண்டுரங்கனின் பக்தரான ஏகநாதர் ஒரு நாள் கங்கையில் நீராடி கரைக்கு வந்தார். அவர் மீது வெறுப்பு கொண்ட முரடன் ஒருவன் வம்புக்கு இழுக்க எண்ணினான். ஏகநாதர் மீது வெற்றிலை எச்சிலை உமிழ்ந்தான். ஆனால் ஏக நாதர் கோபம் கொள்ளவில்லை. விட்டல விட்டல என்று பாண்டுரங்கனின் நாமத்தை ஜெபித்தபடி கங்கையில் மீண்டும் நீராடச் சென்றார். இப்படி ஒரு முறை இரு முறை அல்ல. கணக்கு வழக்கில்லாமல் தொடர்ந்து செய்தான்.

ஆனால் ஏகநாதர் திரும்ப திரும்ப குளிக்கவே கங்கையில் இறங்கினார். ஒரு கட்டத்தில் அவரது பொறுமை கண்டு மனம் திருந்தி சுவாமி என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி காலில் விழுந்தான் ஏக நாதரோ நான் ஏன் உன்னை மன்னிக்கவேண்டும் கங்கையில் பல முறை நீராடும் வாய்ப்பு உன்னால் அல்லவா கிடைத்தது. அதனால் உனக்கு நான் தான் நன்றி சொல்வேன் என்று பதிலளித்தார்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s