வீட்டு வைத்தியம்

ch

பயத்தமாவு அல்லது அரிசி மாவை தண்ணீரில் தோய்த்து தடவி தேய்த்துக் கழுவி வந்தால் மூக்கைச் சுற்றி இருக்கும் வெண்மை கருப்பு புள்ளிகள் மறையும்.download

பப்பாளிப்பழம் வாழைப்பழம் தேன் கலந்து தேய்த்து வந்தால் கழுத்து கருமையை நீக்கலாம்.ses

நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சைச் சாறு கலந்து உடலில் பூசிக் குளித்து வந்தால் தோல் நோய்கள் வராது.download-1

கட்டை விரல் அளவு சுக்குத் துண்டை தோல் நீக்கி தட்டி ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பசும்பாலும் பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் தலையில் ஏற்பட்ட நீர்க்கோவை தீரும்.download-2

அதிக வேலை பயணம் மன அழுத்தம் போன்றவற்றால் சில சமயம் காய்ச்சல் வருவது மாதிரி ஓர் உணர்வு ஏற்படும்   அவ்வாறான நேரத்தில் இருபது துளசி இலைகளுடன் ஒரு துண்டு சுக்கைத் தட்டிப்போட்டு கஷாயம் செய்து உடனே குடித்து விட்டால் காய்ச்சல் அண்டாது.download-3

ஒரு சிறு துண்டு வெள்ளரிக்காயில் 10 மிளகுகளைத் திணித்து அதை அப்படியே நெருப்பில் சில நிமிடங்கள் சுட்டு எடுத்து அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி சற்று நேரத்தில் விட்டுவிடும்.ka

சிலருக்கு உடல் மெலிந்து என்ன சாப்பிட்டாலும் தேறாமல் இருக்கும். அவ்வாறுள்ளோர் தினசரி காலை மாலை அரை ஸ்பூன் அளவுக்கு கரிசலாங்கண்ணிப் பொடியை இளஞ்சூடான பசும் பாலில் கலந்து குடிக்க வேண்டும். வீட்டில் எள் உருண்டைகளை செய்து வைத்துக்கொண்டு காலை இரவு ஆகிய இரு வேளைகளிலும் உணவுக்குப் பின் இரண்டு உருண்டைகள் உண்ணலாம்.download-4

கொப்பரைத் தேங்காய்த் துண்டை வாயில் போட்டு நன்றாக மென்று அப்படியே கொப்பளித்து முடிந்தவரை அடக்கி வைத்து துப்பி விடவும். இப்படித் தினமும் மூன்று முறை செய்தால் சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.20

ஆறு சின்னவெங்காயத்தை உரித்து சிறிது நெய்விட்டு வதக்கி இரவு எட்டு மணியளவில் சாப்பிட்டுவிட்டால் பிறகு நன்றாக தூக்கம் வரும்.download-5

முந்திரிப் பழத்தின் சாறை எடுத்து பூசிக்கொண்டு ஒரு மணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு சில நாட்கல் செய்தால் வேர்க்குரு மறைந்துவிடும்.download-6

கொழுப்பு சத்துக்கள் குறிப்பாய் ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்புக்களை நிற்கிறது பூண்டு. எனவே பூண்டை நம் உணவில் சேர்ப்பது முக்கியம்.download-7

உடல் எடை கூட வாழைப்பழம் முக்கிய பங்கு வசிக்கிறது. பப்பாளிப்பழம் மலச்சிக்கலைத் தீர்க்கும்.

வாயுப்பிடிப்பு போக இஞ்சி பால் பெருங்காயம் சுக்குப் பொடி ஏற்றது.167

மிளகுப் பொடி அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிட இருமல் சளி சரியாகும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s