வாத நோய்களை போக்கும் ஆரஞ்சு

download

மனித உடலின் மிக முக்கிய நோய் தீர்க்கும் சக்தியான விட்டமின் சி அதிகமாக இருப்பது ஆரஞ்சில்தான். ஓர் ஆரஞ்சில் விட்டமின் சி யின் அளவு 19 மி கிராம்.  சிட்ரஸ் பழங்கள் வரிசையில் ஆரஞ்சு பெறுவது முதலிடம்.

உடலின் செல்களைத் தாக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது ஆரஞ்சு ஆரோக்கியத்துக்கு அவசியமான உடல் செல்களை ஆரஞ்சு கண் இமைகளைப் போலக் காக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எத்தகைய நோயிலிருந்தும் நம்மை மீள வைக்கும் அற்புத சக்தி ஆரஞ்சுக்கு உண்டு.

மருத்துவ பயன்கள்

இதில் அதிகளவு கால்சியம் இருப்பதால் உடலில் உள்ள எலும்புகள் பற்களைப் பலப்படுத்துகிறது. பி கரோட்டின் உள்ளதால் நம் உடலில் உள்ள செல்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. மெக்னீசியம் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.  தொடர்ந்து ஆரஞ்சை உண்ண ரத்தத்தில் உள்ள கொழுப்பு அதிகரிக்கிறது.  போலிக் அமிலம் இருப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. பொட்டாசியம் இருப்பதால் உடலில் உள்ள தாது உப்புக்களை சமப்படுத்துகிறது.

ஆரஞ்சுப் பழத்தினால் தீரும் நோய்கள்download-1

வாத நோய்களான மூட்டுவலி இடுப்பு வலி கழுத்து வலி நீங்கும். ஆஸ்துமா பசியின்மை இருமல் சளி மலச்சிக்கல் போன்றவற்றைப் போக்கும். இதய நோய் இளைப்பு நோய் முகப்பரு கரும்புள்ளி ஆகியவை காணாமல் போகும். தூக்கமின்மையை விரட்டும். நரம்புகளைப் பலப்படுத்துவதோடு உடல் சோர்வையும் போக்கும். உடல் எடையைக் குறைக்கும். குழந்தைகள் வயது முதிர்ந்தோருக்கு உடல் பலத்தை அதிகரிக்கும். ஆரஞ்சுப் பழச்சாறுடன் தேன் கலந்து அருந்த உடலுக்கு சக்தியைத் தரும்.  நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். ஆரஞ்சுச் சாறுடன் உப்பு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து அருந்த இருமல் சளி ஆஸ்துமா குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s