ஆஹா ஆலயம்

chidambaram

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மேற்கூரையில் 2600 தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாம். இது சராசரியாக மனிதன் ஒரு நாளில் சுவாசிக்கும் மூச்சுக்காற்றைக் குறிக்கிறது.  இந்த மேற்கூரையில் உள்ள தங்க ஆணிகளின் எண்ணிக்கை 72000  இவை மனித உடலில் இருக்கும் 72000  நரம்புகளை  உணர்த்துகின்றன. கோபுரத்தில் இருக்கும் 9 கலசங்கள் மற்றும் அர்த்தமண்டபத்தில் இருக்கும் 6 தூண்கள் முறையே 9 சக்திகள் மற்றும் 6 சாஸ்திரங்களைக் குறிக்கின்றன. இக்கோயில் பூமத்திய ரேகை மையப்புள்ளியில் அமைந்துள்ளதாகப் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு விஞ்ஞானிகள்  உறுதி செய்துள்ளனர். இதுதான் சிதம்பர ரகசியம்sam_0858

கேரளாவில் திருச்சூருக்கு அருகில் த்ரிப்ரயார் அல்லது திருபுரையார் என்ற அழகிய ஊரில் ஸ்ரீராமர் கோயில் உள்ளது. மூன்று பக்கங்களிலும் திரிபுரையார் என்ற நதி ஓடுகிறது. இங்கு தட்சிணாமூர்த்தி சன்னதியும் உள்ளது. நமஸ்கார மண்டபத்தில் அனுமான் இருக்கிறார். ஆற்றில் உள்ள மீன்களுக்கு அவலும் கதலிப்பழமும் போடுகிறார்கள். அதற்கு மூனூட்டு பிரார்த்தனை என்று பெயர்.thiruvannamalai_

திருவண்ணாமலையில் ஏறும்பொழுது நடந்து போனால் நமக்கு நல்லது நடக்கும். இந்த மலையில்  நிறைய லிங்கம் உண்டு. ஒவ்வொரு லிங்கத்தையும் தரிசித்து மனதார வேண்டிக்கொண்டால் நல்லது நடக்கும். ஒவ்வொரு பௌர்ணமியன்ரும் திருவண்ணாமலை ஏறினால் நல்லது . அங்கு குபேரலிங்கம் உள்ளது. அங்கு கடன்பட்டோர் நம்மால் இயன்ற காசு பணம் வைத்து அந்த லிங்கத்தை மனசார வேண்டினால் நம் கடன் அடைந்து நாம் நல்ல வசதியாக வாழ்வோம்.201

திருச்சி பொம்பலூருக்கு தெற்கே 15 கிமீ தொலைவில் உள்ள திருத்தலம் செட்டிக்குளம். தேரோடும் குமர பெருமானுடன் கவி நடனம் புரியும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத்தலம். மிகவும் பழமையானதும் பெரியதும் ஆகும். ஏழு நிலை ராஜகோபுரம் 10 மைல் தொலைவில் எங்கிருந்தாலும் தெரியும். கரும்பை ஏந்தி நிற்கும் தண்டபாணியைக் காண 240 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மாசி மாத பூஜையில் சூரியனின் கதிர்கள் கருவறையில் படுவது விசேஷம்.p103

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பேராவூரணியில் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோயில் உள்ளது. தேர்வு நேரத்தில் மாணவ மாணவிகள் தங்கள் ஹால் டிக்கெட்டை இவரின் திருவடியில் வைத்து பிரார்த்தனை செய்து எடுத்துச் செல்கிறார்கள். இவரை ஹால்டிக்கெட் பிள்ளையார் என்று அழைக்கின்றனர்.dsc04541

நெல்லை மாவட்டம் திருகுறுங்குடி க்ஷேத்திரம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இத்தலம் சைவ வைணவ ஒருமைப்பாட்டுக்கு உகந்ததாக உள்ளது. இக்கோயிலில் உள்ள பெருமாள் நின்ற நம்பி இருந்த நம்பி கிடந்த நம்பி என்றும் பாற் கடற் பெருமாள் மற்றும் மலைமேல் நம்பியாகவும் ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கின்ரார். கோயிலில் சிவன் சன்னதி ஒன்றும் உள்ளது. மிக அற்புதமான சிற்ப மண்டபம் யாழி மண்டபம் உள்ளது. மலைமேல் செல்ல வசதியாக ஜீப் போக்கு வரத்து உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s