வல்லவனுக்கு வல்லவன்

thief-clipart-1

முகமூடித் திருடன் ஒருவன் ஏமாற்று வித்தை செய்து கொள்ளையடிப்பான். அதே நேரம் தன்னை யாரும் ஏமாற்ற முடியாது என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.  ஒரு நாள் இரவு ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்து விட்டு வந்து கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தது. காட்டுப்பாதையில் நீண்ட தூரம் பயணித்ததால் அவன் களைத்துப் போயிருந்தான்.  வழியில் குளம் ஒன்று தென்பட அதன் கரையில் நின்றான். திருடனை அடிக்கடி காட்டுப்பாதையில் நோட்டமிட்ட சிறுவன் ஒருவன் குளத்தில் ஏதோ தேடுவதைப் போல நடித்தான்.  அதை உண்மை என்று நம்பிய திருடன் “ தம்பி ………….இங்கு என்ன தேடுகிறாய்?  “ என்றான் திருடன்.

“ குளிப்பதற்காக வந்த இடத்தில் என்னுடைய புது மோதிரம் தண்ணீருக்குள் விழுந்து விட்டது “ என்று சொல்லி அழுதான் சிறுவன்.  அவன் பேச்சை உண்மை என்று நம்பிய திருடன் அதை அபகரிக்க திட்டமிட்டான்.  “ தம்பி கவலைப்படாதே உனக்காக நானே தண்ணீருக்குள் தேடி வருகிறேன் “ என்று சொல்லிவிட்டு தன்னிடம் உள்ள நகை பொட்டலத்தை அவன் கையில் கொடுத்துவிட்டு நீருக்குள் தேட ஆரம்பித்தான்.  இது தான் சமயம் என சிறுவன் கண் சிமிட்டும்  நேரத்திற்குள் காட்டுப் பாதையில் ஓடி மறைந்தான். எங்கு தேடியும் திருடனால் சிறுவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்ந்த திருடனின் அகம்பாவம் நீங்கியது.

Advertisements

2 thoughts on “வல்லவனுக்கு வல்லவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s