நியூ[ஸ்]மார்ட்

couple-find

ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவரின் தோட்டத்தில் விளைந்த கேரட் ஒன்றில் தங்க மோதிரம் இருந்தது  அந்த தோட்டத்தின் உரிமையாளர் பல வருடங்களுக்கு முன் அங்கே வேலை செய்து கொண்டிருந்தபோது அவரது திருமணமோதிரம் நழுவி விழுந்து தொலைந்துபோய்விட்டது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சில நாட்களில் அவரது மனைவியும் இறந்து விட்டார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு அவர் கேரட்டை அறுவடை செய்யும்போது கிடைத்திருக்கிறது. இப்போது 82 வயதாகும் அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த மோதிரம் திரும்பக் கிடைத்தது இறந்து போன என மனைவி மீண்டும் என்னும் இணைந்துள்ளது போன்று இருக்கிறது என்று கூறியுள்ளார்.download-2

அமெரிக்காவில் அதிபர் தேர்தலோடு நாடாளுமன்ற 34 செனட்டர் பதவிகளுக்கும் மக்கள் பிரதி நிதிகள் சபைக்கும் [ யு எஸ் காங்கிரஸ் ] தேர்தல் நடைபெற்றது. இதில் 3 தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.kamala

கலிபோர்னியா மாகாணத்தில் ஜன நாயகக் கட்சி வேட்பாளர் 51 வயதான கமலா ஹாரிஸ் செனட்டராக வெற்றிபெற்றுள்ளார். வாஷிங்கடனின் சியாட்டில் இந்திய வம்சாவளி பெண்ணான பிரமிளா ஜெயபால் மக்கள் பிரதி நிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.raja

இல்லினாய்ஸ் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட் 42 வயது ராஜா கிருஷ்ணமூர்த்தியும் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவர் கலிபோர்னியாவில் இருந்து மக்கள் பிரதி நிதிகள் சபை தேர்தலில் வெற்றி பெற்ற ரோஹித் கன்னா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த அமி பேரா  இவர் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.peki-vitson

விண்வெளிக்குச் செல்லும் மிக வயதான பெண்மணி என்ற பெருமை பெற்றுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பெக்கிவிட்சன் [56] அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் என்ற பெருமையும் இவருக்குக் கிடைக்க உள்ளது. தனது மூன்றாவது விண்வெளிப் பயணத்தை கஜகஸ்தானின் ஏவுதளத்திலிருந்து தொடங்கியிருக்கிறார். இவருடன் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் விண்ணுக்குச் சென்ற ரஷ்யா பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த  விண்வெளி வீரர்களும் உள்ளனர். இவர்கள் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.download-1

சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசுக்கான 3 பேர் கொண்ட இறுதிப் பட்டியலில் 16 வயதான இந்திய மாணவி கேகசன் பாசு இடம் பெற்றுள்ளார்.  துபாயிலுள்ள தேரா சர்வதேசப் பள்ளியில் படித்து வரும் இவர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பருவ நிலை மாறுபாடு உயிரினங்களிடம் அன்பு செலுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார். கிரீன் கோப் என்ற அமைப்பை நிறுவி அதில் 1000 பேரை தன்னார்வத்தொண்டர்களாக இணைந்து பணியாற்றி வருகிறார். இசை நடனம் பேச்சுப்போட்டி ஆகியவற்றிலும் தேசிய சர்வ தேச அளவிலான பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார்.download

சீனாவில் புதுவித ஹெட்ஃபோன்கள் கிடைக்கின்றன. ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் பேசும்போதும் பாட்டுக் கேட்கும்போதும் காது வலிக்க ஆரம்பித்துவிடும் இந்தப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  Spirit E 666  ஹெட்போன்கள். இது அவதார் போல் நீண்ட காது போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவரவர் சரும நிறத்துக்கு ஏற்பவும் இந்தக் காது ஹெட்ஃபோன்கள் கிடைக்கின்றன. இவை சீன இணையதளம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளன.campbell

தானே பொம்மைகள் செய்து நோயாளி குழந்தைகளுக்கு அவற்றை அன்பளிப்பாகக் கொடுத்து வருகிறான் தாஸ்மேனியாவில் வசிக்கும் 12 வயது கேம்பல் ரிமெஸ் என்ற சிறுவன் 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ மனைகளில் இருக்கும் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக பொம்மைகளை அளிக்க விரும்பினான் ரிமெஸ். ஆனால் அவன் பெற்றோருக்கு போதிய வசதியில்லை. இணையதளங்களில் வீட்டிலேயே பொம்மைகள் செய்வது எப்படி என்பதைத் தேடி பிடித்து தானே துணிகளை வெட்டி தைத்து பொம்மைகள் செய்ய ஆரம்பித்துவிட்டான். மருத்துவ மனையிலுள்ள குழந்தைகளிடம் பொம்மைகளைக் கொடுத்தவுடன் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்கிறான்  இதுவரை 800 பொம்மைகளை குழந்தை நோயாளிகளுக்கு வழங்கியிருக்கிறான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s