குட்டிச் செய்திகள்

large_101324143

ஒரு தலை பிரம்மா

பிரம்மா என்றாலே நான்முகன் என்பர்/ இவருக்கு நான்கு தலைகள் இருக்கும். மதுரை அருகிலுள்ள கொடிக்குளம் வேத நாராயணப் பெருமாள் கோவிலில் இவர் ஒரு தலையுடன்  பெருமாளை வணங்கிய நிலையில் இருக்கிறார். இங்குள்ள குகைக்குள் பெருமாள் பாதம் தனியாக இருக்கிறது.  அன்னியர்கள் படையெடுப்பின் போது பிள்ளை லோகாச்சாரியார் என்ற மகான் ஸ்ரீரங்கம் கோவில் உற்சவரை இங்குள்ள குகையில் சில காலம் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தார். அந்த இடத்தில் பிற்காலத்தில் சுவாமியின் பாதம் வைக்கப்பட்டது. அருஇல் வேத நாராயணப்பெருமாள் சன்னதியும் பிள்ளை லோகாச்சாரியார் சன்னதியும் உள்ளது.

வாஸ்து புருஷன்p102a

வீடு கட்டிடங்கள் கோவில் கட்டும்போது வாஸ்து பார்க்கிறார்கள். அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இஉர்ந்து வழிந்த வியர்வையிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கல் பூமியை விழுங்க முயன்ற பூதத்தை குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக்கொண்டனர்.  பசியால் வாடிய பூதத்திடம் இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும்போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும் என்று கூறினார்.

மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமி பூஜையின் போது வாஸ்து ஹோமம் செய்தான் கட்டுமானப் பணி தடையின்றி நிறைவேறும்.

கோயிலுக்கு செல்வது ஏன்?kasivisvanathar1

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் குறிக்கிட்டு ஆண்டவனை அடைய நாம் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்………………. அங்கு போகாமலேயே ஆண்டவனை அடைய முடியாதா? என்று கேட்டார்.

விவேகானந்தர் அவரிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று கேட்டார். அவர் ஓடிப்போய் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.  சுவாமி அவரிடம் நான் தண்ணீர் தானே கேட்டேன் எதற்கு இந்த சொம்பு? என்றார்.

கேள்வி கேட்டவர் குழம்பிப்போய் செம்பில்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்? என்று கேட்டார். சுவாமி அவரிடம் ஆம் சகோதரனே ……………தண்ணீர் கொண்டு வர சொம்பு தேவைப்படுவது போல ஆண்டவனை உணர்ந்து மகிழ ஓர் இடம் வேண்டும். அது தான் ஆலயம். அதனால் தான் கோவிலுக்குப் போக சொல்கிறேன் என்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s