முத்துமலை முருகன்

 

தல வரலாறுt_500_803

முருகப்பெருமான் ஒரு முறை தன் மயில் வாகனத்தில் இவ்வுலகை வலம் வந்தார். அப்போது அவரது கிரீடத்திலிருந்து முத்து ஒன்று உதிர்ந்து கீழே விழுந்து விட்டது. அதை எடுப்பதற்காக இறங்கியவர் இம்மலையில் கால் பதித்ததால் இது முத்துமலை என்று பெயர் பெற்றது.

ஒரு முறை இந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் முருகப்பெருமான் தோன்றி இந்த மலையில் மூன்று காரைச்செடிகள் வரிசையாக இருக்கும். அந்த இடத்தில் தான் சிலை வடிவில் நிற்கிறேன் என்றார்.g_t8_803

இதனை அப்பெண் ஊர் மக்களிடம் தெரிவித்தும் அவர்கள் நம்பவில்லை. பின்பு இதேபோல் தொடர்ந்து மூன்று கார்த்திகை தினத்திலும் பரணி  நட்சட்த்திரத்திலும் அப்பெண்ணின் கனவில் தோன்றி முருகன் தொடர்ந்து கூறவே அந்த பெண்ணே நேரடியாக இந்த மலைக்கு வந்து காரைச்செடிகள் இருப்பதைக்கண்டு பரவசமடைந்தார். இதன் பிறகு தான் ஊர் மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது.  இதை தொடர்ந்து முருகனின் சக்திவேல் நடப்பட்டு கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பூஜை செய்யப்பட்டது. அதன் பின் திருப்பணிக்குழு அமைத்து முன் மண்டபம் மற்றும் கர்ப்பக்கிரகம் கட்டி முடித்து சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சிறப்பம்சம்muthumala

கந்தசஷ்டியின் சிறப்பே வேலில் தான் இருக்கிறது. மாமரமாக உருமாறி நின்ற சூரபத்மனை தனது வேலை எய்து இரண்டாகப் பிளந்தார் முருகன். ஒரு பாகத்தை மயிலாகவும் மற்றொன்றை சேவலாகவும் மாற்றினார். இதைத் தான் வேலிருக்க வினையில்லை  மயிலிருக்க பயமில்லை என்பர்g_t2_803

சக்திமிக்க வேலுடன் நிற்கும் இந்த முருகனை தரிசித்தால் நமது வினைகள் கோவிலின் அருகே உள்ள புற்றில் இரவு நேரத்தில் ஒரு ஒளிக்கீற்று கிளம்புவதைக் காண்பதாக பக்தர்கள் பரவசப்படுகிறார்கள். குழந்தை பாக்கியம் வேண்டியும் திருமணத்தடை நீங்கவும் மனதிற்கு நிம்மதியும் தெம்பும் கிடைக்கவும்  பக்தர்கள் இந்த முருகனை வழிபடுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.  திருக்கார்த்திகை மிக மிக விசேஷம். பங்குனி உத்திர திரு நாளில் தேரோட்டம் ஆகியவை நடக்கிறது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காவடி ஆட்டம் நடக்கும்.

இருப்பிடம்

கோயம்புத்தூர் பொள்ளாச்சி சாலையில் கிணத்துக்கடவு உள்ளது. அங்கிருந்து 12 கிமீ தூரத்தில் முத்துக்கவுண்டனூர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s