ஆஹா ஆலயம்

 

கடலூர் சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தோலைவில் திருச்சோபுர நாத சுவாமி ஆலயம் உள்ளது.  இந்த ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட திருபுவனச் சக்ரவர்த்தியால் கட்டப்பட்டுள்ளது. சுவாமியின் பெயர் மங்களபுரீஸ்வரர் எனும் சோபுர நாதர்.  அம்பாளின் பெயர் சத்தியாய தாட்ஷி எனும் வேல்  நெடுங்கண்ணியாகும். ஆண்டுதோறும் மாசி 20,21,22 தேதிகளிலும் ஐப்பசி 16,17,18 தேதிகளிலும் சூரியனின் கிரணங்கள் இறைவனைத் தழுவுகின்றன.4

மும்பை டிட்வாலாவில் உள்ள சித்தி வினாயக மஹாகணபதி கோயில் விசுவாமித்திரர் மேனகா தம்பதியருக்குப் பிறந்த சகுந்தலாவால் கட்டப்பட்டது.  1965ம் ஆண்டிலும் அதற்கடுத்து 2009 ம் ஆண்டிலும் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டது. இங்கு கணபதியைத் தரிசித்தபின் யாருடன் தனக்குத் திருமணம் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்களோ அது நடக்கும் என்றும் பிரிந்த தம்பதிகள் மறுபடி சேர வாய்ப்பிருப்பதாகவும் நம்பப்படுகிறது. செவ்வாய்க்கிழமையன்று நிறைய கூட்டம் வருகிறது. கணேஷ் சதுர்த்தி அன்று ஐந்து லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள பரக்காலக் கோட்டையில் ஆலமரமே சிவாலயமாகக் கருதப்படுகிறது. நடை கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோமவாரம் மட்டும் இரவிலும் தைப்பொங்கல் அன்றும் திறக்கப்படும். இங்கு மட்டும் வேறு எங்கும் இல்லாதவிதமாக பெண்கள் தங்கள் கூந்தல் நீளமாக வளர வேண்டுமென்பதற்காக காங்கோலை எனப்படும் நீண்ட வாறுகோல்  காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதனை ஏலம் விட்டு கிடைக்கும் தொகை கோயில் வருமானத்தில் சேர்க்கப்படுகிறது.

சிவாலங்களில் பொதுவாக சிவபெருமான் தனியாக சிவலிங்க வடிவில் இருப்பார். சில ஆலயங்களில் பார்வதியுடன் இருப்பார். ஆனால் கோவை திருச்சி நெடுஞ்சாலையில் ராயர் தோட்டம் ஸ்ரீ சக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோயிலின் மூலஸ்தானத்தில் சிவன் பார்வதி வினாயகர் முருகன் ஆகியோர் ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர்.1

கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலையில் அணைக்கரை என்னும் இடத்திலுள்ள ஐயனார் கோயில் மத நல்லிணக்கத்து அடையாளமாகத் திகழ்கிறது.  ஐயனாரின் பரிவாரத் தெய்வங்களுடன் இராவுத்தர் என்பவரின் சிலை உள்ளது. தூண்டிலுடன் காட்சி தரும் இவர் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவர். ஐயனார் கோயிலில் பரிவாரத் தெய்வமாக வழிபாடு செய்யப்படுவது வியப்பாக உள்ளது. மேலும் இக்கோயிலில் ஆசியாவிலேயே மிகப் பெரிய யானை வாகனம் உள்ளதும் தனிச்சிறப்பாகும்.220px

திரு நெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் கருங்குளம் என்ற ஊரில் அருள்மிகு வெங்கடாசலபதி பெருமாள் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் அற்புதம் என்னவென்றால் இங்குள்ள பெருமாளுக்கு உருவம் கிடையாது. சந்தனக்கட்டைதான் பெருமாளின் உருவம் உள்ளது. மூலவர் சந்தனக்கட்டை திருமேனியாகவே காட்சி தருவது வேறு எங்கும் இல்லாத தனிச்கிறப்பு. இங்கு வணங்கி வழிபட்டால் தீராத வயிற்று வலி தீராத வலிகளெல்லாம் தீரும். திருமணத்தடை உள்ளவர்கள் தாமிரபரணியில் நீராடி 48 நாட்கள் விரதமிருந்து திருவோண நாளில் வெங்கடாஜலபதிக்கு பாயசக் கட்டளை செய்து வழிபட்டால் திருமணம் கைகூடும். திருப்பதி வெங்கடாஜலபதிக்கு வேண்டுதல் வைத்து அங்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வேண்டிச் சென்றால் திருப்பதி திருமலைக்குச் சென்ற பலனை அடையலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s