ஆஹா டிப்ஸ்

download-1

தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அதை உட்கொண்டு அரைமணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவுகளை எடுத்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். இது விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.download

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இது தலைமுடி செழித்து வளர உதவும். எனவே தினமும் 8 அல்லது 10 இலையை பச்சையாக மென்று சாப்பிடுவது நல்லது. ஆனால் ஒரு சிலருக்கு இதன் பச்சை வாடை பிடிக்காது. இதற்கு கறிவேப்பிலையுடன் சிறிது தேங்காயோ சர்க்கரையோ அல்லது வெல்லத்தையோ சேர்த்து சாப்பிட பச்சை வாசனை தெரியாது சுவையாகவும் இருக்கும்.kudampuli-0071

குடம்புளி செரிமானத்திற்கு உதவும். வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும். உடல் தசையை வலுப்படுத்துவதுடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். கேரள மக்கள் இதை புளிக்குப் பதிலாக சமையலில் பயன்படுத்துகின்றனர். எளிதில் கரையாத இந்தக் குடம்புளியை தாளிக்கும்போது எண்ணெயில் போட்டால் அதன் புளிப்பு சுவை முழுவதும் இறங்கிவிடும். குழம்பில் கரைத்து ஊற்றியும் பயன் படுத்தலாம்.download-4

இரண்டு வாழைப்பழத்துடன் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒன்றரை தம்ளர் பால் ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஏதாவது ஒரு எசென்ச் ஊற்றினால் புதுமையான சுவையான பாயசம் ரெடி.download-2

கடுகு எண்ணெய் நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைச் சரி விகிதத்தில் கலந்து வைத்துக்கொண்டு உடம்பில் பூசி ஒரு மணி நேரம் வரை ஊறிய பிறகு குளித்தால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மாசு மரு நீங்கிவிடும்.capture-3

தோசை ஆப்பம் சுடும்போது கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு எடுக்க முடியாமல் இருந்தால் கோலியளவு புளியை ஒரு வெள்ளைத்துணியில் மூட்டையாகக் கட்டி எண்ணெயில் தொட்டு தோசைக்கல்லில் தேய்த பிறகு மாவை வார்த்தால் தோசை எளிதாக வந்து விடும்.download-3

கொய்யாப்பழத்தில் நீர் 76% மாவு 15% புரதம் 15% கொழுப்பு 0.2 கால்சியம் 0.01 பாஸ்பரஸ் 0.04 இரும்புச் சத்து 1 யூனிட்டும் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தை சுத்தகரித்து இதய நோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் தலைவலிக்கும் தீர்வு காணலாம்.  மேலும் அஜீரணக் கோளாறு வயிற்றுப்போக்கு மற்றும் கல்லீரல் மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும். எந்தப் பழமானாலும் முதலில் நீரில் மஞ்சள் தூள் சிறிது உப்பு போட்டு கழுவியபின் சாப்பிடவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s