விளகேற்றுவதின் மகிமை

download-1

அகல் எண்ணெய் திரி சுடர் ஆகிய நான்கும் சேர்ந்ததுதான் விளக்கு   அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் இது உணர்த்துகிறது. பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் மஹாலட்சுமி அங்கு வாசம் செய்வாள். தீய சக்திகளும் நம்மை அண்டாது காப்பாள்.  விளக்கு எரியாத இடத்தில் வழிபடக்கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் எரியும் விளக்கை அணைக்கக்கூடாது. அணைந்த விளக்கை ஏற்றலாம்  விளக்கை திரி தடவி ஏற்றிய பின் கையில் பற்றிய எண்ணெயை தலையில் தடவக்கூடாது.

தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை மாதம் கார்த்திகை தினத்தன்று மலை மீது விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இருந்ததற்கான தகவல்கள் காணப்படுகின்றன. சீவக சிந்தாமணி குன்றெத்து உச்சிச் சுடர் என்றும் கார் நாற்பது நலமிகு கார்த்திகை நாட்ட வரிட்ட தலை நாள் விளக்கு என்றும் அக நானூறு  மதி நிறைந்து அறுமின் சேரும் அகல் இருள் ஒரு நாள் மறுகு விளக்கு உறித்து மாலை தூக்கிப் பழவிறல்மூதூர் பலருடன் துவன்றிய விழவு என்றும் கூறுகின்றன.karthigai-deepam-2012

பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆனால் எந்த ஒரு விழாவிலும் மலையில் உள்ள கோயிலில் கொடி ஏற்றும் வழக்கம் இல்லை  கார்த்திகை திருவிழா சஷ்டி திருவிழாவின்போது மலையில் காப்பு மட்டும் கட்டப்படும்.

தைப்பூசம் வைகாசி விசாகம் விழாக்களில் பழனி அடிவாரத்தில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் கொடி ஏற்றப்படும். பங்குனி உத்திர திருவிழாவின் போது திருவாவினன்குடி கோயிலில் கொடி ஏற்றப்படும்.a8fd1

அண்ணாமலை தீபம் பார்த்தால் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும் வேறு எந்த விழா கண்டாலும் பார்ப்பவருக்கு மட்டுமே முக்தி கிடைக்கும். அண்ணாமலை தீபத்துக்கு மட்டுமே இத்தகைய சிறப்பு.

முருகன் இராஜ அலங்காரத்தில் கிரீடத்துடனும் ஆண்டிக் கோலத்தில் மொட்டைத்தலையுடனும் காட்சி தருவார். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் என்ற ஊரில் ஊற்ற கோயிலில் இருக்கும் முருகன் கிரீடத்துக்குப் பதில் குல்லா அணிந்து அருள்பாலிக்கிறார்.download-2

திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக அருள்புரிவதைப் போலவே மஹாவிஷ்ணுவும் காஞ்சிபுரத்திலுள்ள தீபப் பிரகாசர் ஆலயத்தில் ஜோதி வடிவாக அருள்புரிகிறார்.

பிரம்மா யாகம் செய்தபோது மஹாவிஷ்ணு ஜோதி வடிவாக விளங்கியதால் இவரை தீபப் பிரகாசர் என்றும் விளக்கொளி பெருமாள் என்றும் அழைக்கிறார்கள்.  திருக்கார்த்திகை  தீபத்தன்று வைணவர்கள் தீபப்பிரகாசருக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள் அதற்கு  பெருமாள் கார்த்திகை என்று பெயர்.

2 thoughts on “விளகேற்றுவதின் மகிமை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s