பச்சைக்கற்பூரம்

 

இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுதும் பல இனிப்பு உணவுக்கும் இனிப்பு தின்பண்டங்களுக்கும் சுவையைக் கூட்ட பயன்படுத்திய ஒரு பிரத்தியேகப் பொருள்தான் பச்சைக் கற்பூரம்b683

உணவில் மட்டுமில்லாமல் மருத்துவத்திலும் இதனை பயன்படுத்தினர். உடலில் ஏற்படும் வலிகள் எரிச்சல் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் விதமாக பச்சைக் கற்பூரம் இருந்திருக்கிறது.

பச்சைக் கற்பூரம் என்பது சீனா ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் விளையும் ஒரு வகை கற்பூர மரத்தின் பட்டையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்.  அதாவது இயற்கையாக எந்தப் பக்குவமும் அடையாத மரப்பட்டையிலிருந்து கிடைக்கக்கூடியது.  இரண்டாயிரம்  வருட பாரம்பரியம் கொண்ட பச்சைக் கற்பூரம் பல நல்ல குணங்களை கொண்டுள்ளது.  சுவையாக இருந்தாலும் சரி உடல் வலியாக இருந்தாலும் சரி அளவோடு ஒரு மில்லி கூட மிகாமல் சேர்க்க நல்ல பலனைக் கொடுக்கும்.

மொத்தத்தில் பச்சைக் கற்பூரம் ஒரு மருந்து. மருந்தை மருந்தாகப் பயன்படுத்த பல நன்மைகள் உள்ளன. ஆனால் இன்று சந்தையில் கிடைக்கும் பச்சைக் கற்பூரங்களில் பல இயற்கையானது கிடையாது. அவை பல ரசாயன வேதியியல் மாற்றத்தால் உருவாக்கி விற்பனைக்கு வருகின்றன. கைகளால் தொட சிறு கட்டிகள் போன்ற தன்மையுடன் இந்த செயற்கைப் பச்சைக் கற்பூரம் இருக்கும். இதனைக் கொண்டு எளிதில் இயற்கையானதா அல்லது செயற்கையானதா  என்பதைக் கண்டு பிடிக்கலாம்.silver

இயற்கையான பச்சைக் கற்பூரத்தை அளவுக்கு மிஞ்சி பயன்படுத்தினாலே பல பின் விளைவுகளும் பக்க விளைவுகளும் ஏற்பட செயற்கை பச்சைக் கற்பூரத்தால் எவ்வளவு பாதிப்புகள் விளையும் என்று சற்று சிந்தித்துப் பார்க்கவும். இதனைத் தவிர்த்து தரமான உண்மையான இயற்கை பச்சைக் கற்பூரம் அளவோடு பயன்படுத்தி பல நன்மைகளை அடையலாம்.

நன்றி     நாச்சாள்  இயற்கை வாழ்வியல் நிபுணர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s