ஏலோலோ ஏலக்காய்

12

தினமும் ஓர் ஏலக்காய் வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். ஜீரண உறுப்புக்கள் சீராக இயங்கும்.  ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும். கண் பார்வை அதிகரிக்கும்.  ஏலக்காய் நான்கு ஏழு துண்டு சுக்கு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து நீர் விட்டுக் கொதிக்க வைத்துப்பருகினால் வறட்டு இருமல்  தொண்டை வலி தீரும்.

மன அழுத்த பிரச்னை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். வாய்வு தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தாள் வாய்வுத் தொல்லை உடனே நின்றுவிடும்.

ஏலக்காயைத் தேனீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்து பருகினால் இதிலுள்ள மனங்கவரும்  நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சியைத் தருகிறது. அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டிப்போடவும். பிறகு புதினாவில் ஐந்து ஆறு இலைகள் மட்டும் போட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் வருவது குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s