மூளையில் இருக்குது விஷயம்

brain1

நாம் 10 விழுக்காடு மூளையைத்தான் பயன்படுத்துகிறோம். 100 விழுக்காடு பயன்படுத்தினால் அறிவியலாளர் ஐன்ஸ்டீன் போல் இருப்போம் என்று அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் அந்தத் தகவல் சரியல்ல உண்மையில் நமது உடலில் நூறு விழுக்காடு வேலை செய்யும் உறுப்பு மூளைதான்.  சுவை மணம் தொடு உணர்வு சிந்தித்தல் பேசுதல் என நம் மூளை ஓயாது எந்த நேரமும் வேலை செய்துகொண்டே இருக்கிறது.

வளர்ந்த மனிதனின் மூளை எடை 1.5 கிலோ கிராம்.  ஒவ்வொரு நொடியும் நமது மூளைக்குள் 1 லட்சம் அமில மாற்றங்கள் நமக்குத் தெரியாமலே நடக்கின்றன. நமது மூளையில் உள்ள ரத்த நாளங்களை விரித்து நீட்டினால் 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு நீளுமாம். மூளையில்  2 வயதில் தான் மிக அதிக செல்கள் உருவாகின்றன. பிறகு அவை குறைய ஆரம்பித்து விடுகின்றன.brain2

வாழ்க்கையில் மூளை குவாட்ரிலியன்……………………………………… அதாவது 10 கோடியே கோடி தகவல்களை தனித்தனியாக தனக்குள் தக்க வைத்துக் கொள்கிறது.  18 வயதில் மனிதனின் மூளை செயல்படும்போது 10 முதல் 23 வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.  உள்ள ரத்தத்திலும் ஆக்சிஜனிலும் 20 விழுக்காடை மூளைதான் பயன்படுத்துகிறது..  மனித மூளை மணிக்கு 431 கிமீ வேகத்தில் செயல்படக்கூடியது. வலியை அறியும்போது ஆணின் மூளை வேறு மாதிரியும் பெண்ணின் மூளை வேறு மாதிரியும் செயல்படுவதாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்களுக்கான சிறப்பு ஹார்மோனாக அறியப்படும் ஈஸ்ட்ரோஜன் நினைவுத்திறனை வளர்க்கக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால்தான் பெண்கள் அதிக நினைவாற்றலோடு இருக்கிறார்களாம்

இடது கை பழக்கம் கொண்டவர்களின் மூளையில் கார்பஸ் கொலாசம் என்ற பகுதி வலது கை பழக்கம் கொண்டவர்களை விட 11 விழுக்காடு பெரிதாக இருக்கிறது.  அண்மைய ஆய்வின்படி மூளை கசக்கி பிழியப்படும் மன இறுக்கத்தைத் தரும் முதல் 3 வேலைகள்…………..1. கணக்காளர் 2. நூலகர்  3. கனரக வாகன ஓட்டுனர்

 

நன்றி    ரிபாத்துன்னிஷாதமீம்    திருமங்கலைக்குடி

Advertisements

One thought on “மூளையில் இருக்குது விஷயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s