மஞ்சு நாத சுவாமிக்கு மகா நாடோவளி

download

தர்மஸ்தலாவில் நடக்கும் மிகப்பெரிய உற்சவம் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் லட்சதீப உற்சவம் தான் எல்லா கேரளத்துக் கோயில்களிலும் உள்ளது போல் இங்கேயும் உள் கோயிலில் வெளிச்சுவர் முழுவதும் பதினாயிரக்கணக்கான அகல் விளக்குகள் சட்டங்களில் வரிசை வரிசையாக ஏற்றப்பட்டிருக்கின்றன.

இதைத் தவிர கார்த்திகை தீப உற்சவ காலத்தில் கோயில் வெளிப்புறத்திலும் மற்ற இடங்களிலும் பளீரெனப் பிரகாசிக்கும் தீப அலங்காரம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.download-1

தர்மஸ்தலாவில் கார்த்திகை தீப உற்சவம் தொடர்ந்து ஐந்து நாட்கள்  நடைபெறுகின்றன  கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று பகுள தசமி நாளில் உற்சவம் ஆரம்பமாகிறது அது அமாவாசை இரவு வரையில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

????????????????????????????????????
????????????????????????????????????

அந்த நாளில் மஞ்சு நாத சுவாமிக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வெள்ளி தேரில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். இங்கு ஐந்து நாட்கள் நடைபெறும் லட்சதீப உற்சவத்தின் ஒரு நாளை தீபாலங்காரப் பெருவிழா என்று கொண்டாடுகிறார்கள். அன்று மஞ்சு நாத சுவாமி கோயில் முழுவதும் ஜோதிமயமாகக் காட்சி அளிக்கும். இந்த உற்சவத்தின் போதுதான் தர்மஸ்தலாவில் சர்வ தர்ம சாஹித்ய சம்மேளனம் என்கிற வித்வத் சபை கூடுகிறது. அடுத்த மூன்றாம் நாள் நுண்கலை மகா நாடும் நான்காம் நாள் அகில உலக சமய மகா நாடும் கூடுகின்றன.

மஞ்சு நாத சுவாமிக்கு அருகில் உள்ள அம்ம வாரு அம்மனுக்கும் விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றன. இசைக் கச்சேரிகள் கிராமிய நடனங்கள் கதாகாலட்சேபங்கள் பஜனைகள் எல்லாம் திமிலோகப்படும்.manjunatha

இத்திருத்தலத்தில் மகா நாடோவளி என்று ஒரு உற்சவம் உண்டு. இங்கே ஆதியிலே தர்மஸ்தலா ஆலயத்தை ஸ்தாபித்த பெர்கண்ண பெர்கடேக்கு காட்சி கொடுத்த தர்ம தேவதைகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த விழா பல வருடங்களுக்காக நடத்தப்படுகிறதுkarth

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s