ஆஹா தகவல்

majuli-island

உலகிலேயே பெரிய நதியின் நடுவில் அமைந்துள்ள மிகப் பெரிய தீபகற்ப நகரம் மஜூலி நகரம்.  அஸ்ஸாமிலுள்ள பிரம்மபுத்ரா நதியில் இது அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 1260 சதுர கிமீ  இதன் ஜனத்தொகை 1,67,304  கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் இது உலகின் மிகப்பெரிய தீபகற்ப நகரம் என இடம் பெற்று  2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ம் நாள் முதல் மஜூலி ஜில்லா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமின் வைணவ சம்பிரதாயஸ்தலம் [ Assamese Neo-Vashnavite Culture ]  எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.tears

நுண்ணோக்கியினால் [ microscope ] மனிதர்களின் ஆனந்தத்தினால் வரும் கண்ணீரையும் சோகத்தினால் வரும் கண்ணீரையும் வெங்காயம் வெட்டுவதினால் வரும் கண்ணீரையும் வேறு படுத்திக்காட்ட முடியும்.dc

பாம்புக்கு இமைகளே கிடையாது. கண்களைத் திறந்துகொண்டேதான் தூங்கும். மேலும் அதன் நாக்குக்குத்தான் மோப்ப சக்தி உண்டு. நாக்கை உபயோகிப்படுத்தித்தான் மோப்பம் பிடிக்கும்.download

எறும்புக்கு மற்றொரு எறும்பின் உடல் நாற்றத்தை வைத்து தனது நண்பர்களையும் பகைவர்களையும் அறிந்து கொள்ளும் சக்தி உண்டு.buttermilk-channel

மோர் விற்பனை மோர் பந்தல் போன்றவை வெயில் கால காட்சிகள். நியூயார்க்கில் பட்டர்மில்க் கேனல் என்னும் மோர்க் கால்வாய் உள்ளது. ஒரு மைல் நீளமுள்ள இந்த கால்வாய் அமெரிக்கக் கடற்படை வீரர்களின் போக்குவரத்துக்குப் பயன்படுகிறது. மான்ஹாட்டன் மார்க்கெட்டுக்கு பால் மோர் வெண்ணெய் இந்தக் கால்வாய் வழியே கொண்டு செல்லப்படுவதால் காரணப் பெயர் பெற்றது என்கின்றனர்  இந்தக் கால்வாயில் போக்குவரத்து மிகவும் கடினமானது. படகு போக்குவரத்தில் பால் திரிந்து மோராக மாறுவதால் பட்டர்மில்க் கேனல் எனப் பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர்.power-button-icon-31

டி  வி    லேப் டாப்  வாஷிங் மிஷின் என அனைத்து எலக்ட்ரிகல்  எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீது பவர்பட்டன் சிம்பல் மிகப்பிரபலமானது. இரண்டாம் உலகப்போரின் போது இன்ஜினியர்கள் பைனரி சிஸ்டம் அடிப்படையில் பவர் பட்டனுக்கு இந்த சிம்பலைப் பய்ன்படுத்தினார்கள். பைனரி சிஸ்டத்தின்படி 1 என்றால் ஆன் என்றும் 0 என்றால் ஆஃப் என்றும் அர்த்தம். 1973 ம் ஆண்டு சர்வதேச எலக்ட்ரோடெக்னிகல்  கமிஷன் [ IEC ] பவர் பட்டனுக்கு இந்த சிம்பல்தான் என வகுத்தது.iceland-pony

ஐஸ்லாந்தில் மட்டுமே காணப்படும் குட்டை ரக குதிரைகளின் பெயர்தான் போனி. ஐந்தடிக்கும் குறைவான உயரத்தில் 350 கிலோ வரை எடை கொண்ட இந்த இனக் குதிரைகள் பார்ப்பதற்குப் பொலிவான தோற்றம் தரும். இவை பல் வேறு வண்ணங்களில் காணப்படும். அதோடு பந்தயங்களிலும் பங்கெடுத்து ஓடும். ஆற்றல் கொண்டவை. பெண்கள் போடும் குதிரைவால் கொண்டையைப் போனி டெய்ல் என்று கூறுவதே இந்த ரக குதிரைகளின் நினைவாகத்தான்  இதன் வாலில் உள்ள முடி பெண்ணின் கூந்தல் போன்று அழகாக இருப்பதே இதற்குக் காரணம்.mysorepak

மைசூர் மேல்கோட்டை மாண்டியா மாவட்டத்தில் பாண்டவ புரம் தாலுகாவில் உள்ளது திரு நாராயணபுரம் திருக்கோவில்   இக்கோயிலுக்கு அருகில் உள்ள ஸ்வீட் கடைகளில் விற்கும் மைசூர்ப்பாகு  செங்கல் சைஸூக்கு இருக்கும்  மைசூர் பாகு  என்ன விலை என்று கேட்டாலே அரை செங்கல் சைஸூக்கு உடைத்துக் கையில் தந்து விடுகிறார்கள்  டேஸ்ட் பார்க்க

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s